அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர், பழனிசாமி போட்டியின்றி தேர்வு? -இன்று வெளியாகிறது முறையான அறிவிப்பு!

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை-அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்று (டிச.,06) வெளியாகிறது.அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக

சென்னை-அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்று (டிச.,06) வெளியாகிறது.



latest tamil news


அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்; இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.இப்பதவிக்கு உரியவர்களை, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம், தலைமையகத்தில் நடந்தது.அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு முறையில், இணைந்தே தேர்வு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.தடை கோரி மனுமறுநாள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்தது.முதல் நாளில், வேட்பு மனு வாங்க வந்த ஓமப்பொடி பிரசாத் சிங், கட்சியினரால் தாக்கப்பட்டார். அவர் ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், நேற்று முன்தினம் அப்பதவிகளுக்கு இணைந்தே மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், அவர்கள் பெயரில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மனு தாக்கல் செய்தனர்.நேற்று முன்தினம் மாலை 3:00 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்தது. இரண்டு நாட்களில், 150க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியானது.நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது.


latest tamil news


ஆனால், எத்தனை மனுக்கள் பெறப்பட்டன; எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டன என்ற விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்காகவே, அதிகம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், இன்று மாலை 4:00 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும்.

அதன்பின், யாரெல்லாம் போட்டியிடுகின்றனர் என்ற விபரம் தெரிவிக்கப்படும். போட்டி இருக்காது என்பதால், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால், முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
06-டிச-202114:02:41 IST Report Abuse
Rengaraj சசிக்கு செக் வைக்கவே இப்படி ஒரு தேர்தல் என்று எல்லோரும் நினைக்கின்றனர். இவர்கள் தலைமை பிடிக்கவில்லை என்று ஒரு உறுப்பினர் நினைத்தால் வேறு கட்சிக்கு செல்லலாமே அல்லது ஒரு பிரிவாக சேர்ந்து தேர்தலுக்கு மனு செய்யலாமே ரௌடியிசம் என்று சொல்லி மழுப்பி தேவையில்லை. எல்லா கட்சியிலும் இது இருக்கிறது. இவர்களே மீண்டும் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்ந்தேடுக்கப்படுவார்கள் என்றால் கட்சி கலகலத்து விடும் என்று நிறைய பேர் ஆரூடம் சொல்கிறார்கள். போட்டிக்கு யாரும் மனு செய்யவில்லை என்று சொன்னால் கட்சியில் தொண்டர்களின் ராணுவ கட்டுப்பாடா அல்லது இப்போது இருக்கும் தலைமையின் மீதான நம்பிக்கையா அல்லது இவர்களை கண்டு பயமா அல்லது தொடை நடுங்கிக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு காத்துகொண்டு இருக்கும் தந்திரவாதிகளா அல்லது இந்த கட்சியை விட்டால் வேறு கட்சியில் நம்மை மதிக்கமாட்டார்கள் பேசாமல் இங்கேயே இருந்து காலத்தை ஓட்டுவோம் என்ற ஒரு மெத்தனமா அல்லது கூலிக்கு மாறடிக்க எங்கு இருந்தால் என்ன என்ற அளவில் கொள்கை கொண்ட கூட்டமா அல்லது உண்மையிலேயே எம்.ஜி ஆர் ஜெ இவர்களின் மீதான விசுவாசமா? கட்சியின் தொண்டர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மாற்று கட்சிக்காரர்கள் விமர்சனம் அவசியமற்றது.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
06-டிச-202113:37:32 IST Report Abuse
S. Bharani உள்கட்சி ஜனநாயகத்தில் கருணாநிதியையே தாண்டி விட்டனர் பழனியும் பன்னீரும்... அற்புதம்.......
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
06-டிச-202115:26:54 IST Report Abuse
RAVIKUMARசங்கி ..உனக்கு அவுங்கள திட்டணுமணா திட்டு ...இங்க எதுக்கு கருணாநிதிய தொட்டுக்கர.....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
06-டிச-202113:26:50 IST Report Abuse
pattikkaattaan இரண்டு கைகள் நான்கானால் ... இருவருக்கேதான் எதிர்காலம் ... பகைவர் ஓடுங்களே ... புலிகளிரண்டு வருகின்றன ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X