தோள் கொடுத்து உதவிய திரிணாமூல் காங்.,குக்கு சமாஜ்வாடியின் கைமாறு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய பாஜ., மற்றும் காங்., கட்சிகளுக்கு எதிராக களம்காண சமாஜ்வாடி மற்றும் திரிணாமூல் காங்., கட்சிகள் பிரசாரத்தின்போது மாற்றி மாற்றி ஆதரவளித்துக்கொண்டுள்ளன.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப், டில்லி, உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, காங்கிரஸ், பாஜக

புதுடில்லி: மத்திய பாஜ., மற்றும் காங்., கட்சிகளுக்கு எதிராக களம்காண சமாஜ்வாடி மற்றும் திரிணாமூல் காங்., கட்சிகள் பிரசாரத்தின்போது மாற்றி மாற்றி ஆதரவளித்துக்கொண்டுள்ளன.



latest tamil news


அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப், டில்லி, உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் உத்தரப்பிரதேச பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை முன்னதாக திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி சந்தித்து உரையாற்றினார்.


latest tamil news


உத்தரபிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிக்கு முழு ஆதரவுடன் செயல்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த உறுப்பினரான ஜெயா பச்சன் இதற்கு கைமாறாக மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மம்தா வாரணாசி சென்று கோயில்களை வழிபட்டார். வரும் நாட்களில் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது

மம்தாவின் தினசரி பணிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக அகிலேஷ்-மம்தா சந்திப்பு தள்ளிப் போடப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் மம்தா காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் எதிராக மாபெரும் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் களம் காண முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-டிச-202110:36:56 IST Report Abuse
sankaseshan பன்றியுடன் சேரும் கன்றும்....
Rate this:
Cancel
06-டிச-202110:07:59 IST Report Abuse
ஆரூர் ரங் மம்மூ க்கு திரிபுராவில் வாங்கிய🤪 அடி😛 போதாது . உ.பி யிலும் வாங்க ஆசை போலிருக்கு
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
06-டிச-202111:37:48 IST Report Abuse
தஞ்சை மன்னர் அட லு ... மம்தா ஆட்சிதானே நடக்குது அப்புறம் எப்படி அடி வாங்கியது பி சே பி...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202108:51:15 IST Report Abuse
duruvasar சந்திரபாபு நாயுடு அவர்கள் இப்படித்தான் ஊர்ஊராய் சுத்திக்கிட்டு அலைஞ்சாரு. கூடவே டேனியல் ராஜா ஒத்து ஊதுபவராக கூட்டிக்கொண்டு நாதஸ்வரம் வாசித்தாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X