உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்-தற்போது ஐரோப்பாவில் உள்ள உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு போர் தொடுத்தால் கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.தங்கள் எல்லையில் உள்ள உக்ரைனின் கிரீமியா பகுதியை 2014ல் ரஷ்யா கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மீது சில பொருளாதார தடைகளை அமெரிக்கா

வாஷிங்டன்-தற்போது ஐரோப்பாவில் உள்ள உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு போர் தொடுத்தால் கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.



latest tamil news


தங்கள் எல்லையில் உள்ள உக்ரைனின் கிரீமியா பகுதியை 2014ல் ரஷ்யா கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மீது சில பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.இந்நிலையில் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.

குறிப்பாக, 'ஸ்விப்ட்' எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்றத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு தடை விதிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.ஏற்கனவே ஈரானுடன் மோதல் ஏற்பட்டபோது இந்த முறையை அமெரிக்கா கையாண்டது. அதனால், ஈரானுக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டது.


latest tamil news


தற்போது அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதனால் ரஷ்யா கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.இதைத் தவிர ரஷ்யாவுக்கு பல்வேறு வகைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அமெரிக்க எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-202119:11:08 IST Report Abuse
பேசும் தமிழன் அது ரஸ்யா... இத்த செத்த ஈரான் இல்லை... பூச்சாண்டி காட்ட... இன்னும் சொல்ல போனால் உங்களிடம் இருக்கும் ஆயுதங்களை விட அதிக ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளது
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-டிச-202113:13:57 IST Report Abuse
jayvee புடினின் இந்திய பயணத்தை ஒட்டி வரும் இந்த அறிவிப்பு வெறும் புஸ்வானம்தான் ..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
06-டிச-202111:42:22 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN உலகப்போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X