பொது செய்தி

இந்தியா

பணியிடமாற்றத்துக்கு பரிந்துரை : மத்திய அரசு கடும் எச்சரிக்கை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி-'மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றும் உதவி பிரிவு அலுவலர்கள், மத்திய தலைமையக சேவையின் கீழ் வருகின்றனர். 'குரூப் - பி'

புதுடில்லி-'மத்திய தலைமையக சேவையின் கீழ் வரும் உதவி பிரிவு அலுவலர்கள் இடமாற்றம் கோரி, அமைச்சர்கள், எம்.பி.,க் கள் உள்ளிட்டோரின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.



latest tamil news


மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றும் உதவி பிரிவு அலுவலர்கள், மத்திய தலைமையக சேவையின் கீழ் வருகின்றனர். 'குரூப் - பி' அலுவலர்களான இவர்களுடைய சேவை பெரும்பாலும் அமைச்சகங்கள் அல்லது துறையின் தலைமையகமான டில்லியில் தேவைப்படுகிறது.ஆனால், தனிப்பட்ட அல்லது மருத்துவ காரணங்கள் கூறி, பணியிடமாற்றம் கேட்டு பலர் விண்ணப்பிக்கின்றனர்.


latest tamil news


இதற்கு அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோரின் பரிந்துரையையும் அதனுடன் இணைக்கின்றனர்.இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:பணி விதிகளின்படி இது போன்ற அரசு அதிகாரிகள் தங்களுடைய பணியிடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசியல் அல்லது பிற அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பணியிடமாற்றம் கேட்டு பலர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
06-டிச-202114:55:59 IST Report Abuse
Narayanan எந்த ஒரு அரசுத்துறை அதிகாரியும் அரசியல் தலையீட்டால், அது ஆளும் கட்சி , எதிர்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரைகளின்படி மாற்றம் கூடாது . புதிய முதல்வர் வந்தாலும் பழைய அதிகாரிகளின் வழிகாட்டுதல்படிதான் ஆட்சி செய்யவேண்டும் அது தான் நல்லது .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
06-டிச-202113:46:02 IST Report Abuse
அசோக்ராஜ் சட்ட விரோதமா பரிந்துரை செய்யறவனுக்கு தண்டனை கிடையாதா? எரியறதை பிடுங்குனா தளைக்கிறது அடங்குமே? அதைச் செய்ய மாட்டாங்க.
Rate this:
selva - Chennai,இந்தியா
06-டிச-202119:20:53 IST Report Abuse
selvaஅவ.. அப்பிடித்தான் .. நீயா பாத்து...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
06-டிச-202113:15:32 IST Report Abuse
jayvee அமைச்சர்கள் மீதும் MP க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேணும். ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X