பொது செய்தி

தமிழ்நாடு

முன் பனிக்காலம் துவக்கம்: 9ம் தேதி வரை மிதமான மழை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை- --தமிழகத்தில் பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், 9ம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக தென் மாவட்டங்களில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று பகல் வரையிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம்,

சென்னை- --தமிழகத்தில் பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், 9ம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக தென் மாவட்டங்களில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று பகல் வரையிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இன்று பிற்பகல் முதல் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில், மிதமான மழை பெய்யும்.

நாளை முதல் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை முன் பனிக்காலம் துவங்கியுள்ளது. சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், பனி மூட்டம் காணப்படுகிறது.


latest tamil news


இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான, 'ஜாவத்' புயல் நேற்று ஒடிஷாவின் அருகே சென்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழந்துள்ளது.ஒடிஷாவின் சில மாவட்டங்களில் கனமழை மட்டும் பெய்துள்ளது. கருணை என்ற பொருளில் பெயர் கொண்ட ஜாவத் புயல், பெரிய அளவில் சேதங்கள் இன்றி, கருணையுடன் கரையை கடந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202108:42:15 IST Report Abuse
duruvasar அப்ப மெதுவா விடியல் வருதுன்னு அர்த்தமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X