மானாமதுரை மின்மய ரயில் பாதையை கமிஷனர் ஆய்வு

Added : டிச 06, 2021
Advertisement
மதுரை : மதுரை --- மானாமதுரை இடையே 48 கி.மீ., துாரத்திற்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் சிறப்பு ரயிலில் ஆய்வு செய்தார்.மதுரை திடீர்நகர் மற்றும் தெற்குவாசல் பாலங்களில் ரயில்வே மின்வழி பாதை, அனுப்பானடி கேட்டை பார்வையிட்டார். சிலைமானில் இதற்காக அமைக்கப்பட்ட துணை மின் நிலையம், இரு வளைவுகளில் நிர்மாணிக்கப்பட்ட மின்வழித்தட
 மானாமதுரை மின்மய ரயில் பாதையை கமிஷனர் ஆய்வு

மதுரை : மதுரை --- மானாமதுரை இடையே 48 கி.மீ., துாரத்திற்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் சிறப்பு ரயிலில் ஆய்வு செய்தார்.

மதுரை திடீர்நகர் மற்றும் தெற்குவாசல் பாலங்களில் ரயில்வே மின்வழி பாதை, அனுப்பானடி கேட்டை பார்வையிட்டார். சிலைமானில் இதற்காக அமைக்கப்பட்ட துணை மின் நிலையம், இரு வளைவுகளில் நிர்மாணிக்கப்பட்ட மின்வழித்தட ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். திருப்பாச்சேத்தி அருகே ரயில் பாதையை குறுக்கிடும் 400 கிலோ வாட் தமிழக மின்வாரிய மின் வழித்தடத்தை ஆய்வு செய்தார்.

ரயில் பாதையில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை பலகைகள் உள்ளனவா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரங்கள், நடைமேம்பாலத்தை பார்வையிட்டார். பின் அங்கிருந்து மணிக்கு நுாறு கி.மீ., வேகத்தில் மதுரைக்கு சிறப்பு ரயிலில் பயணித்தார்.

மானாமதுரையிலிருந்து 37 நிமிடங்களில் ரயில் மதுரை வந்தது.முதன்மை மின்வழி திட்ட இயக்குனர் சமீர்டிகே, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சுரமேஷ், பாதுகாப்பு அதிகாரி மனோகரன் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X