இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்| Dinamalar

இன்று இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
புதுடில்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று(டிச.,6) இந்தியா வருகிறார்.இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு இன்று
India,Russia,Vladimir Putin,இந்தியா,புடின்,விளாதிமிர் புடின்

புதுடில்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாட்டில் பங்கேற்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று(டிச.,6) இந்தியா வருகிறார்.

இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு இன்று வருகை தர உள்ளார்.


latest tamil news



டில்லியில் நடக்கும் இந்த மாநாட்டில், நம் பிரதமர் நரேந்திர மோடியை, விளாடிமிர் புடின் சந்தித்துப் பேச உள்ளார். இதில் இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X