பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்த முடிவு; பள்ளி கல்வித்துறை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தவும், வினா வங்கி வழங்கவும்,பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு,

சென்னை : அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தவும், வினா வங்கி வழங்கவும்,பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.



latest tamil news



பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு, தமிழக அரசு பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இந்த முறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும், பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழியே ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. வேலுார், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கும்திட்டம், தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.அந்த வகையில், நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளை, தமிழக அரசு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் நீட் எதிர்ப்பு, வருங்காலங்களில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jay -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-202101:39:19 IST Report Abuse
Jay நல்ல முடிவு. வீணாக நீட் தேர்வை வைத்துக்கொண்டு அரசியல் செய்யாமல் இதுபோன்று மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-டிச-202119:35:50 IST Report Abuse
vbs manian நீட் எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து நீட்டுக்கு பயிற்சி என்ற நிலை வந்தது மாணவருக்கு செய்யும் பெரிய உதவி..வாழ்க.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
06-டிச-202119:30:58 IST Report Abuse
spr புத்திசாலித்தனமான முடிவு பாராட்டுவோம் நீட் தேர்வு ஒரு சவால் சந்திக்க மறுப்பது அழகல்ல சில நேரங்களில் பின் வாங்குவது நல்ல போர்த்தந்திரம் "இந்த முறை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும், பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது." பிற மொழிகளையும் கற்க ஊக்குவிக்க வேண்டும் தமிழைப் பரப்பவும் பிற மாநிலங்களில் அதற்கான பயிற்சிப் பள்ளிகளையம் உருவாக்க வேண்டும் இதன் மூலம் நம் தமிழக இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில், கல்வி வேலை வாய்ப்பினைப் பெறலாம். அதன் மூலம் அவர்கள் பல்கிப் பரவி உலகம் முழுவதிலும் தமிழகத்துப் பெருமைகளை பரப்பலாம் பொறியியல் மருத்துவம் மற்றும் சட்டத் துறைகளில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களை தமிழ்ப்படுத்தலாம் இதுவே கமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X