பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மானியம் தேவை!

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்ட இயக்குனர் ராமகிருஷ்ணன்: உயிரியல் எரிவாயு தொழில்நுட்பத்தை மக்களிடையே பரப்புவதில் பல தடைகள் இருக்கின்றன. உதாரணமாக, அதற்கு நிறைய மாட்டுச்சாணம் தேவைப்படும். பெரும்பாலான சிறு விவசாயிகளிடம் கூட, எரிவாயு கலனில் போடும் அளவுக்கு சாணம் கிடைப்பதில்லை.ஆனால் எல்லா வீடுகளிலும், சமையலறை கழிவுகள்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்ட இயக்குனர் ராமகிருஷ்ணன்: உயிரியல் எரிவாயு தொழில்நுட்பத்தை மக்களிடையே பரப்புவதில் பல தடைகள் இருக்கின்றன. உதாரணமாக, அதற்கு நிறைய மாட்டுச்சாணம் தேவைப்படும். பெரும்பாலான சிறு விவசாயிகளிடம் கூட, எரிவாயு கலனில் போடும் அளவுக்கு சாணம் கிடைப்பதில்லை.



latest tamil news


ஆனால் எல்லா வீடுகளிலும், சமையலறை கழிவுகள் அதிகமாக தேக்கமடைகின்றன. அந்தக் கழிவுகளை கையாள்வது சவாலாக இருக்கிறது. உற்பத்தியை விட கழிவுகளை மேலாண்மை செய்வது தான் கடினமான வேலை. நாங்கள் அந்தக் கழிவுகளை, மீத்தேன் எரிவாயுவாக மாற்றுகிறோம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சாண எரிவாயுக் கலனுடைய மேம்படுத்தப்பட்ட வடிவம் தான், எங்களின் 'சக்தி சுரபி' கலன்.


latest tamil news



இதன் மூலம் சமையலறை காய்கறிக் கழிவுகளை எரிவாயுவாக மாற்றுவதோடு, அந்தக் கழிவுகளை செடிகளுக்கு உரமாகவும் மாற்றலாம்.கழிவுகளை உள்ளே போட குழாய், செரிப்பான், வாயு கொள்கலன், உரத்திற்கான கழிவுப்பாதை ஆகியவற்றை உள்ளடக்கியது தான் சக்திசுரபி கலன். 1 கன மீட்டர் வாயுவை உற்பத்தி செய்வதற்கான கலன் அமைக்க, 25 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகிறது.

நிலைத்த கலன் அமைக்க, மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறை, 8,000 ரூபாய் மானியம் கொடுக்கிறது. நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு, இந்த கலன் போதும். 1 கன மீட்டர் முதல், 100 கன மீட்டர் வரை வாயு உற்பத்தியாகும் அளவுக்கு கூட, இதை பெரிதாக வடிவமைக்கலாம்.பெரிய உணவு விடுதிகள், பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகள், காப்பகங்கள் மாதிரியான இடங்களில் இதை அமைத்திருக்கின்றனர்.

இதே எரிவாயுவை பயன்படுத்தி, மின்சார உற்பத்தியும் செய்யலாம்.மின்சார உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டரில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம், இந்த வாயுவைப் பயன்படுத்தி அதை இயக்க முடியும்; மின்சாரம் கிடைத்து விடும்.சாண எரிவாயு, சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிப்பு மாதிரியான மாற்று எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு மானியம் கொடுப்பது

போல், கர்நாடகா, கேரளா அரசுகளும் மானியம் கொடுக்கின்றன.தமிழகத்தில், இதற்கு மானியம் கொடுப்பதில்லை. மானியம் கிடைத்தால், நிறைய பேர் மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மாறுவர்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppiah - ????????,இந்தியா
06-டிச-202113:03:18 IST Report Abuse
Karuppiah ஏப்பா நல்ல எண்ணத்தோட யோசிக்க மாட்டிங்களா . எவ்ளோ கஷ்டப்பட்டு கண்டு புடிச்சு இருக்காங்கோ , ஊக்கப்படுத்த வேண்டாம், ஆனா discourage பண்ணாமயாச்சும் இருக்கலாமே
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
06-டிச-202110:17:25 IST Report Abuse
Mirthika Sathiamoorthi அட போங்க பாஸ் நீங்க எப்பவுமே இப்படித்தான் ஏற்கனவே கொடுக்குறேன்னு சொன்ன கேசுக்கான மானியத்தையே கொடுக்ககாணம். அப்புடியே கொடுத்தாலும் பேங்க் அக்கவுண்டில் மினிமம் அமௌன்ட் மெயின்டைன் பண்ணலைன்னு சொல்லி அபராதம கொடுத்த கேஸ் மானியத்தை திருப்பி வாங்கிட்டோம். இதுல இன்னொரு மானியமா?
Rate this:
Cancel
06-டிச-202110:00:27 IST Report Abuse
ஆரூர் ரங் பசு வெட்டி தின்ன மட்டுமே பயன்படும். அதை ஒரு மாமிச சுரங்கமாக👹 மட்டுமே பார்க்கும் கூட்டம் இங்கு ஆள்கிறார்கள். அவர்களாவது மானியம்☹ கொடுப்பதாவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X