தமிழக இளைஞர்களின் தவறான போக்கை சுட்டிக்காட்டி திருத்த, அரசியல் தலைவர்களால் முடியவில்லையா

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகம் போதை மாநிலமாக மாறி கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற, 6 மாதத்துக்குள், தமிழகத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவையும் தி.மு.க., அரசு செய்துள்ளது. முதல்வர், சிறப்பு படை அமைத்து, தமிழகத்தில் போதை பொருட்கள் வினியோகத்தை தடுக்க வேண்டும்.தமிழக இளைஞர்களின் தவறான போக்கை சுட்டிக்காட்டி திருத்த, அரசியல்
பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா

மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தமிழகம் போதை மாநிலமாக மாறி கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற, 6 மாதத்துக்குள், தமிழகத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவையும் தி.மு.க., அரசு செய்துள்ளது. முதல்வர், சிறப்பு படை அமைத்து, தமிழகத்தில் போதை பொருட்கள் வினியோகத்தை தடுக்க வேண்டும்.


தமிழக இளைஞர்களின் தவறான போக்கை சுட்டிக்காட்டி திருத்த, அரசியல் தலைவர்களுக்கு முடியவில்லையா அல்லது விருப்பமில்லையா என்ற கேள்வி இதில் எழுகிறது!



பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதிலும், வெள்ள பாதிப்பு தொடராமல் இருக்க நடவடிக்கை எடுப்பதிலும், தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது.


உண்மை தான். மழை, வௌ்ளம் விஷயத்தில், தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அரசு மட்டுமின்றி, கடந்த, 50 ஆண்டுகளாக மாறி மாறிஆட்சியிலிருந்த இரண்டு கட்சிகளும் தான் தோல்வி அடைந்து விட்டன!



அ.தி.மு.க., முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு: தமிழகம் இப்போது மர்ம தேசமாக மாறிஉள்ளது. அச்ச உணர்வுடன் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். முதல்வரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது.


latest tamil news




தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அரசுகள் முதலில், லஞ்ச ஒழிப்பு துறையை தம் வசம் வைத்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குவது வழக்கமான ஒன்றே. எனவே, பாம்பின் கால் பாம்பே அறியும் என்பது போலவே உங்கள் பேச்சும் உள்ளது!



த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழர்களுக்கான புத்தாண்டு, சித்திரை முதல் நாள் என்பதற்கு வாழ்வியல் காரணங்கள் உண்டு. தமிழர்கள் சித்திரை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடியதை வரலாறு தெரிவிக்கிறது. எனவே, சித்திரை முதல் நாளை தான் தமிழ்ப் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும்.


காலப்போக்கில், தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் தங்கள் தலைவர்கள் பிறந்த நாளை, தமிழ் புத்தாண்டு நாளாக வைக்க வேண்டும் என்பர். இப்படி ஆளாளுக்கு கேட்டால், புத்தாண்டே வேண்டாம் என தமிழர்கள் தப்பித்து ஓடிவிடுவர்!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேச்சு: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கும் சசிகலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவரை ஒருபோதும் கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம்.


இப்படித் தான் உங்கள் கட்சியினர் ரசிக்கும் வகையில் பேசுவீர்கள்... அந்த பக்கம், 'பல்டி' அடிப்பவர்களில் முதல் ஆளாக நீங்கள் தான் இருப்பீர்கள் என, உங்கள் கட்சியினரே சொல்கின்றனரே!


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-டிச-202103:50:37 IST Report Abuse
meenakshisundaram வைகோ ,சீமான் ,நாஞ்சில் சம்பத் இவிங்க காலத்துக்கு அப்புறம் தமிழக இளைஞன் கண்டிப்பா திருந்திடுவான்
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
06-டிச-202117:26:37 IST Report Abuse
Rajamani K முதலும் திருந்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே.
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
06-டிச-202116:14:32 IST Report Abuse
pattikkaattaan தமிழக இளைஞர்கள் நன்கு படித்து இன்றைக்கு உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் நல்ல வேலையில் இருக்கிறார்கள் ... பிஹார் போல முன்னேறிய மாநிலமாக இல்லை அவ்வளவுதான் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X