பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மையாகிறது கோயில் தெப்பம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பம் பாசி படர்ந்து அருவருப்பான நிலையில் ஆண்டுக்கணக்கில் காட்சியளிக்க,அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் முயற்சியால் தற்போது துாய்மை பணி நடந்து வருகிறது.அக்காலத்தில் நோய்களை தீர்க்கும் 'சூரிய புஷ்கரணி' என அழைக்கப்பட்ட

அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பம் பாசி படர்ந்து அருவருப்பான நிலையில் ஆண்டுக்கணக்கில் காட்சியளிக்க,அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் முயற்சியால் தற்போது துாய்மை பணி நடந்து வருகிறது.



latest tamil news



அக்காலத்தில் நோய்களை தீர்க்கும் 'சூரிய புஷ்கரணி' என அழைக்கப்பட்ட இந்த தெப்பம் ,காலப்போக்கில் பராமரிக்காமலும் தூர்வாராமலும் விட்டதால், மழை நீர் வரும் ஓடைகள் அடைப்பட்டு மழைநீரும் சேகரமாகாது,கழிவு நீர் தேங்கும் தெப்பமாக மாறியது.அப்பகுதியினர் பிளாஸ்டிக் கழிவு, குப்பையை கொட்டி மாசுப்படுத்த மாடுகள், பன்றிகள் மேயும் இடமாக மாறியது. தெப்பம் முழுவதும் பாசி படர்ந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. ஹிந்து அறநிலையத் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. இதனால் தற்போது பெய்த கன மழையில் கூட தெப்பம் நிறையவில்லை.


latest tamil news



தெப்பத்தை தூர்வார கோயிலின் செயல்அலுவலர் தேவி ,சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரினர்.இதை தொடர்ந்து அமைச்சர் முயற்சியால் முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட அமைப்பாளர் சோலையப்பன் , 27 வது வார்டு செயலாளர் நாகப்பன் ஆகியோர் தெப்பத்தை துார்வார நடவடிக்கை எடுத்தனர். குல்லுார்சந்தை அணையிலிருந்து 2 பரிசல்களுடன் தொழிலாளர்கள் தெப்பத்தில் சூழ்ந்த பாசியை அகற்றினர். இதோடு துார்வாரும் பணியும் நடந்தது. நேற்று மட்டும் ஒரு டன் குப்பை , பாசிகள் அகற்றப்பட்டன.
முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் கூறியதாவது: இதன் பணிகள் இன்னும் 10 நாட்கள் நடக்கும். பணிகள் முழுமையாக முடிந்தவுடன் நீரை நிரப்பி மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தெப்பத்தை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைப்பதோடு, சுற்றி பேவர் பிளாக் பதிக்கப்பட்டு காலை , மாலை நேரங்களில் மக்கள் 'வாக்கிங்' செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்படும். தெப்பத்தை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
06-டிச-202116:17:47 IST Report Abuse
pattikkaattaan ஆனாலும் நாங்கள் இந்துக்களுக்கு எதிரான அரசு என்று தொடர்ந்து கூவுவோம் ..
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202115:10:30 IST Report Abuse
Chinnappa Pothiraj தெப்பக்குளத்தை சுத்தம்செய்து தூர்வாரி மீன்வளர்ப்புக்கு ஏற்றவாறு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வருவாய்துறை அமைச்சர் திரு.சாத்தூர் இராமச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் நற்பணிகள் தொடரவும் செய்த பணிகள் உயர்தரத்துடன் தலைமுறைகளைக்கடந்து சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்.வந்தேமாதரம்,ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
06-டிச-202113:01:29 IST Report Abuse
Rasheel பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X