பொது செய்தி

தமிழ்நாடு

'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் இயக்க தனியாருக்கு தெற்கு ரயில்வே அனுமதி

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் நோக்கில், 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் இயக்க, தனியார் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க, முதலில் பதிவு பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க,
Bharat Gaurav, Trains, Southern Railway, தெற்கு ரயில்வே, பாரத் கவுரவ், ரயில், தனியார் ரயில்

சென்னை: இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் நோக்கில், 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் இயக்க, தனியார் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க, முதலில் பதிவு பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, 'பாரத் கவுரவ்' திட்டம் துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. 'இத்திட்டத்தில், ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உதவும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணி' என ரயில்வே வாரியம் அறிவித்தது. ரயிலில் பயணியர் கட்டணங்களை ஒப்பந்த நிறுவனமே முடிவு செய்யலாம். அசாதாரண விலை நிர்ணயிக்காதபடி, ரயில்வே கண்காணிக்கும்.


latest tamil news


இந்த ரயில் முன்பதிவுக்கு, ஒப்பந்ததாரர் முதலில் 1 லட்சம் ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின், பாதுகாப்பு வைப்புத் தொகையாக, ஒரு பெட்டிக்கு 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்ததும், இந்த தொகை ஒப்பந்ததாரருக்கு திருப்பி வழங்கப்படும்.சுற்றுலா ரயிலை குத்தகைக்கு எடுத்து இயக்க விரும்புவோர், தெற்கு ரயில்வே அலுவலகத்தை, 90031 60955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், bharat gauravtrainssr@gmail.com முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ் சுற்றுலா ரயில் இயக்க தனியார் நிறுவனம் ஒன்று, தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் விண்ணப்பித்து இருந்தது. அந்த நிறுவனத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாரத் கவுரவ் திட்டத்தை இயக்க முதலில் பதிவு பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
06-டிச-202119:09:28 IST Report Abuse
Sidhaarth அந்த தனியார் நிறுவனம் அதானியா???/
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
06-டிச-202118:19:06 IST Report Abuse
Balaji இதெல்லாம் நடக்கற காரியமா தெரியல.. ஒரு பெட்டிக்கு ஒரு கோடி வைப்பு நிதி.. ஒப்பந்தம் முடிய சொல்லோ அது திருப்புவாய்ங்க... யாரும் வர மாட்டார்கள்..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-202115:34:04 IST Report Abuse
வெகுளி தனியாருக்கு அனுமதியில்லை என்று கூவுபவர்கள் முதலில் சன் குழுமத்தை அரசுடைமையாக்க கோரி உண்ணாவிரதம் இருக்கணும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X