பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளுக்கு அருகே 'குட்கா' விற்பனை: தகவல் கொடுக்க போலீசார் 'அட்வைஸ்'

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
திருப்பூர்: ''திருப்பூர் மாநகரில் பள்ளிகளுக்கு அருகே கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை நடந்தால், எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்,'' என்று போலீசார், தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டம் - 2012' மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு
பள்ளிகளுக்கு அருகே 'குட்கா' விற்பனை: தகவல் கொடுக்க போலீசார் 'அட்வைஸ்'

திருப்பூர்: ''திருப்பூர் மாநகரில் பள்ளிகளுக்கு அருகே கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை நடந்தால், எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்,'' என்று போலீசார், தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டம் - 2012' மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு திருப்பூர் மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் வரதராஜன், நல்லுார் உதவி கமிஷனர் லட்சுமணகுமார், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா, தெற்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பதுருன்னிசா பேகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


latest tamil news


இந்நிகழ்ச்சியில் போலீசார் பேசியதாவது: பெற்றோரிடம் தங்களது பிரச்னைகளை சொல்ல தயக்கம் காட்டும் மாணவ, மாணவியர் ஆசிரியர்களான, உங்களிடம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோரை விட, ஆசிரியர்களான உங்களிடம் தான் அதிகம் நேரம் இருக்கின்றனர். மாணவர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுங்கள். பெற்றோர்களை அழைத்து, அவ்வப்போது மாணவர்களின் நடவடிக்கை குறித்து தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடத்துங்கள். இதுபோன்ற கூட்டத்தில் எங்களுக்கும் தகவல் கொடுத்தால், நாங்களும் பங்கேற்போம். மாணவர்களின் வழக்கமான நடவடிக்கையில் இருந்து வேறு ஏதாவது மாற்றம் தென்பட்டால், அவர்களை அழைத்து பேசுங்கள். அப்போது, அவர்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடியும்.


latest tamil news


'போக்சோ' வழக்கு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மாணவர்களின் பிரச்னை குறித்து தயங்காமல், எங்களுக்கு தெரியப்படுத்தி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை நடந்தால், எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.போலீசாருடன், கல்வித்துறையும் இணைந்து பணியாற்றும் போது, அவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் பேசினர். மாணவர்களின் வழக்கமான நடவடிக்கையில் இருந்து வேறு ஏதாவது மாற்றம் தென்பட்டால், அவர்களை அழைத்து பேசுங்கள். பிரச்னை குறித்து தயங்காமல், எங்களுக்கு தெரியப்படுத்தி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Ontario,கனடா
06-டிச-202120:02:43 IST Report Abuse
Rajesh புதுசா கமிஷன் aaடிக்கிறதுக்கு செம ஐடியா போடுது போலீஸ்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
06-டிச-202119:14:55 IST Report Abuse
 Muruga Vel எந்த ரிக் ஷா ஓட்டுபவரை கேட்டாலும் சரியான இடத்துக்கு கூட்டி போவார் .. போலீஸ் ஸ்டேஷனுக்கு சரியா மாமூல் தர்றதில்லையா ..
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
06-டிச-202115:03:29 IST Report Abuse
Rengaraj இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அர்ஜுன் நடித்த முதல்வன் என்ற ஒரு திரைப்படம் வந்தது. அதில் புகார்பெட்டி என்ற ஒன்று ஆங்காங்கே இருக்கும் மக்கள் அதில் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று வரும். ஒவ்வொரு பள்ளியிலும் அந்த மாதிரி ஒரு பெட்டியை வைத்தால் இந்த மாதிரி போதை பொருள், பாலியல் சீண்டல் குற்றங்கள் , மது விற்பனை தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற்றோர்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் துறை சொல்லலாமே வாரம் ஒரு முறை அந்த அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் இந்த பெட்டிகளை திறந்து புகார்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க செய்யலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X