பொது செய்தி

இந்தியா

நியூசி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்; இந்திய அணி இமாலய வெற்றி

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா
INDvNZ, Test, India, Win, NewZealand, இந்தியா, நியூசிலாந்து, டெஸ்ட் கிரிக்கெட், வெற்றி, தொடர்

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன் முன்னிலை பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான நேற்று (டிச.,05) இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.


latest tamil news



முதல் இன்னிங்ஸ் முன்னிலை (263 ரன்) சேர்த்து நியூசிலாந்துக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதனை விரட்டிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து, 400 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் அஷ்வின், ஜெயந்த் யாதவ் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் மொத்தமாக சிக்கினர். முடிவில் நியூசி., அணி 167 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஷ்வின், ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட், அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


14 தொடர் வெற்றி


சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி, 14 தொடரிலும் வென்று சாதித்துள்ளது.


முதலிடம்


இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
06-டிச-202113:14:23 IST Report Abuse
INDIAN Kumar நம் மண்ணில் எப்போதும் நமக்கு வெற்றி தான் . தென் ஆப்ரிக்காவை அதன் மண்ணில் வீழ்த்தினால் அது தான் உண்மையான வெற்றி
Rate this:
Cancel
Rate this:
Cancel
P SRIDHARAN - CHENNAI,இந்தியா
06-டிச-202112:03:42 IST Report Abuse
P SRIDHARAN என்ன பிரயோஜனம் உலக கோப்பை போச்சு அதுவும் பாகிஸ்தானிடம் தோல்வி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X