சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் பிரச்னை: தஞ்சையில் மகனின் கழுத்தை நெரித்து கொன்று பெற்றோர் தற்கொலை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், கடன் பிரச்னை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா,38. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா,32. மகன் ஸ்ரீவத்சன்,11, தனியார் பள்ளியில்
Debt Problem, Thanjavur, Parents, Commit Suicide, Strangling Son, தஞ்சாவூர், கடன் பிரச்னை, மகன் கழுத்தை நெரித்து கொன்று, பெற்றோர், தற்கொலை,

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், கடன் பிரச்னை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே மேலவெளி மனோ நகரைச் சேர்ந்தவர் ராஜா,38. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அத்துடன் திருவையாறில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா,32. மகன் ஸ்ரீவத்சன்,11, தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.


latest tamil news


இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் போது, குடும்பத்துடன் ராஜா இறந்து கிடந்தார். மூவரின் உடலையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-டிச-202104:45:45 IST Report Abuse
Matt P பிள்ளைகளையும் கொன்று விட்டும் தாங்களும் தற்கொலை செய்து மாள்வது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகுத்தறிவு என்றார்கள். டி கடை நடத்தியிருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தியிருக்கிறார். உழைப்பாளி தான். கடன் வாங்கி தான் ஆக வேண்டும் என்றால் தேவையான அளவு வாங்க வேண்டும். வீடு வாங்கினாலும் நமது சக்தி அறிந்து வாங்க வேண்டும். எடுத்த உடனே பெரிய வீடு வாங்காமல் இருக்கலாம். தேவையானால் வீட்டிலிருந்து கொண்டே மனைவியம் ஏதாவது குடிசை தொழில் செய்யலாம். செலவை குறைக்க வேண்டுமானால் செலவையும் கடன் அதிகரிக்கும்போது குறைக்கலாம். முடிந்த அளவு பகுத்து அறிந்து செயல்படலாம். வாட்ஸ் அப்பில் சேதி வந்த உடனே உடன் பிறப்பும் இவரை கண்காணித்திருக்கலாம்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் வீட்டின் பேரில் கடன் இருப்பதால் வீடுவிற்ற பணம் கைக்கு வரவில்லை என்றுள்ளது செய்தி கடன் கொடுத்தவன் வீட்டை வாங்கி கொள்ளவும் மாட்டான் வேறு நபருக்கு விற்று கடனை திரும்ப பெற்றுக் கொள்ளவும் மாட்டான் ஐம்பது லட்சம் வீட்டுக்கு பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து விட்டு அதற்குமேல் விலை வைத்து வேறிடத்தில் விற்பனை செய்ய முனைவான் சிலர் வேறு யாரும் வாங்காதபடி வாங்கிவிட்டதாக டாம் டாம் அடித்து விடுவார்கள் வாழவும் மாட்டான் வாழ விடவும் மாட்டான் அதுதான் தமிழகத்திலேயே மிக அதிகமான எண்ணிறந்த புரோக்கர்கள் உள்ள ஊர் தஞ்சாவூர்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
06-டிச-202120:17:15 IST Report Abuse
venkatan சந்தைப்பொருளாதரத்தை நாம் ஏற்றுக்கொண்டது முதல் தாராள மயமாக்கல்...தனியார்மயம்.உலகமயம் என்று..வங்கிகள் கடன்கொடுப்பதும் ஒரு மோசமான நிதி வணிகம்தான்.நமது நாட்டில் வங்கிகள் நிதிச்சேவையை என்றோ நிறுத்திவிட்டு நிதி மாபியாக்களிடம் மண்டியிடுகின்றன.விளைவு:மனித வள நட்டம். கடன் வழங்குவதில் நிறைய வரை முறைக்கு உட்படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X