பொது செய்தி

தமிழ்நாடு

இருக்கு ஆனா இல்லை! தண்ணீர் இருந்தும் நீர் வழித்தடம் இல்லை: வறண்டே காட்சியளிக்கும் மூங்கில் குட்டை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: கனமழையால் பெள்ளாதி குளம் நிரம்பி வழிந்தும் அருகேயுள்ள மொங்கம்பாளையம் மூங்கில் குட்டைக்கு தண்ணீர் பயணிக்க சரியான நீர் வழித்தடம் இல்லாததால் வறண்டே காட்சியளிப்பது விவசாயிகளை வேதனை அடையச்செய்துள்ளது.காரமடை அடுத்த, பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெள்ளாதி குளம் உள்ளது. இக்குளத்திற்கு பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வரும் ஏழு எருமை
தண்ணீர், வழித்தடம், மூங்கில் குட்டை

மேட்டுப்பாளையம்: கனமழையால் பெள்ளாதி குளம் நிரம்பி வழிந்தும் அருகேயுள்ள மொங்கம்பாளையம் மூங்கில் குட்டைக்கு தண்ணீர் பயணிக்க சரியான நீர் வழித்தடம் இல்லாததால் வறண்டே காட்சியளிப்பது விவசாயிகளை வேதனை அடையச்செய்துள்ளது.

காரமடை அடுத்த, பெள்ளாதி ஊராட்சியில், 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெள்ளாதி குளம் உள்ளது. இக்குளத்திற்கு பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வரும் ஏழு எருமை பள்ளம், காரமடை, கட்டாஞ்சி மலை பகுதிகளில் இருந்து மழை பெய்தால் தண்ணீர் வரும். குளத்தில் தண்ணீர் எப்போதும் இருப்பதால், மீன் பிடி தொழிலும் நடந்துவருகிறது. குளத்தைச் சுற்றிலும் உள்ள, 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைத்து வருகிறது. தவிர, ஊராட்சி வழியாக செல்லும் ஏழு எருமை பள்ளத்தில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


சமீபகாலமாக பெய்துவரும் மழையால், பெள்ளாதி குளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறி வருகிறது. இருப்பினும், குளத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் மொங்கம்பாளையத்தில் உள்ள மூங்கில் குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. குட்டை சற்று உயரத்தில் இருப்பதால் குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குட்டைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், மழை காலத்திலும் குட்டை நிரம்பாத சோகத்தில் சுற்றுவட்டார விவசாயிகள் உள்ளனர். சுற்றியுள்ள விவசாய கிணறுகளில், நீர் ஊற்று பெரியளவில் இல்லாததால், குளத்தில் இருந்து குழாய் வசதியை ஏற்படுத்தி, தண்ணீர் கொண்டுவந்து குட்டையை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


latest tamil news



நடவடிக்கை இல்லை!


பெள்ளாதி ஊராட்சித் தலைவர் பூபதி குமரேசன் கூறுகையில், ''மொங்கம்பாளையம் மூங்கில் குட்டை, 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஒரு மாதமாக மழை பெய்தும், இக்குட்டைக்கு மழை நீர் செல்ல பெரிய அளவில் பள்ளங்கள் இல்லாததால் வறண்டே காணப்படுகிறது. ஆனால், 30 அடி உயரமுள்ள பெள்ளாதி குளம் நிரம்பி, உபரி நீர் பவானி ஆற்றுக்கு செல்கிறது. இக்குளத்திலிருந்து குழாய் வாயிலாக மூங்கில் குட்டைக்கு தண்ணீரை கொண்டுவர, மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் அனைத்து தடுப்பணைகளும், குளமும் நிரம்பினாலும், மூங்கில் குட்டை மட்டும் வறண்டு காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
- ,
06-டிச-202111:55:38 IST Report Abuse
அ எத்தனை இடத்தில் பைப் மூலம் தண்ணீர் எடுத்து மேடான பகுதியில் கண்மாயே குளமோ நிரப்புகிறது தமிழகத்தில்.ஓரிரு கோயில் குளத்தை தவிர
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-டிச-202111:00:55 IST Report Abuse
duruvasar சட்டை பை ரொம்புவது தாங்க முக்கியம். விவரம் புரியாத விவசாயிகள். தண்ணி வசதி இருந்தா தொழில்பேட்டை துவக்கிடுவாங்க. பரவாயில்லையா ? விவரமா பேசுங்க அய்யா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X