அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் கருத்து வேறுபாட்டை மறந்து வெற்றி காண வேண்டும்: கமல் வேண்டுகோள்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் விரைவில் நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வெற்றி காண வேண்டும்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கமல் அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று (டிச.,6)
Kamalhaasan, MNM, Dissent, Forget, win, Local Body Elections, Kamal Haasan,  உள்ளாட்சி தேர்தல், கருத்து வேறுபாடு, வெற்றி, கமல்ஹாசன், மநீம

சென்னை: ‛‛தமிழகத்தில் விரைவில் நடக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வெற்றி காண வேண்டும்,'' என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கமல் அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று (டிச.,6) அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளதாவது: நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம். அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு. அதனால் தான் நான் மீண்டுவந்ததாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.


latest tamil news


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.


உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இருந்துவிடாமல், நடக்கவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும்.

உங்களிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேலையைப் பாருங்கள். எப்படி இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் கட்சியினர் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால், மிகவும் ஜாக்கிரதையாக இதை நீங்கள் செய்யவேண்டும். உங்கள் நலன் எனக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கும் மிக முக்கியம்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது நம்முடைய பலம், நம் தொண்டர்கள் தான். அவர்கள் ஆரோக்கியம் எனக்கு மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
07-டிச-202104:53:48 IST Report Abuse
Siva Kumar ஏதாவது தொண்டருக்கு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அந்த செலவு என்னுடையது என்று சொல்ல தயாரா?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-டிச-202123:22:26 IST Report Abuse
Vena Suna இவருக்கு ஒரு சுய புத்தி கிடையாது. எதை சொன்னால் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து சொல்லும் இவர் அதனால் தான் அரசியலில் தோற்கிறார். உண்மையாக இருந்தால் தான் முதலில் வெற்றி பெறலாம். அப்புறம் பல பொய்கள் சொல்லலாம் திமுக போல.
Rate this:
Cancel
shanan -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-202121:13:39 IST Report Abuse
shanan இது எல்லாம் ஒரு பொழப்புவாங்கிய பெட்டிகள் பத்தாது பொல தெரியுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X