பொது செய்தி

இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; பார்லி.,யில் அறிக்கை சமர்பிக்கிறார் அமித்ஷா

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், பார்லி.,யின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள்
Parliament NagalandFiring, AmitShah,

புதுடில்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், பார்லி.,யின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரம் அடைந்த மக்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பான விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன. கிராம மக்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நாகாலாந்தில் வன்முறை சூழல் நிலவுவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் முடக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பார்லி., வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து இன்றைய (டிச.,6) குளிர்கால கூட்டத்தொடரில் லோக்சபாவில் மாலை 3 மணிக்கும், ராஜ்யசபாவில் மாலை 4 மணிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கும் விதமாக அமித்ஷாவின் அறிக்கை இருக்கும் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
06-டிச-202114:05:00 IST Report Abuse
Sundar Anand இது தவறுதலாக நடந்த சம்பவம் ஏன் Sterlite போராட்டத்தின்போது கொல்லப்பட்டார்கள் அதை என்னசொல்லபோகேரியர்கள் ....
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-202113:20:32 IST Report Abuse
Vittalanand Please don't repeat the same comment
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
06-டிச-202112:35:04 IST Report Abuse
Guna அங்க பார்டர்ல வீரத்த காண்பிக்காம குருவி போல செத்துப் போறாங்க. இங்க சொந்த ஜனங்களை சுட்டு கொல்றாங்க. இது நமக்கு தேவையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X