பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ‛‛திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.,6 ம்தேதி):
Tamilnadu, Heavy Rain, IMD, Chennai, Meteorological, Department, announces, 10 districts,  Tamil Nadu, தமிழகம், 10 மாவட்டங்கள் கனமழை, வானிலை ஆய்வு மையம், அறிவிப்பு

சென்னை: ‛‛திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:



latest tamil news


தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.,6 ம்தேதி): திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 7 ம் தேதி: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


latest tamil news


டிச.,8 ம் தேதி: கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


டிச.,9ம் தேதி: அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்கள, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:


latest tamil news



வேப்பூர் (கடலுார்), போடிநாயக்கனுார் (தேனி) தலா 10 செ.மீ., உத்தமபாளையம் (தேனி), காட்டுமயிலுார் (கடலுார்), கன்னிமார் (கன்னியாகுமரி), திருப்பூர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) தலா 9 செ.மீ., பெருஞ்சாணி அணை, சிற்றாறு, புத்தன் அணை (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்துார் (விருதுநகர்) , உடுமலைப்பேட்டை (திருப்பூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 7 செ.மீ., லப்பைக்குடிக்காடு, செட்டிகுளம் (பெரம்பலுார்), ஆண்டிப்பட்டி, கூடலுார் (தேனி) தலா 6 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
06-டிச-202114:29:47 IST Report Abuse
 Muruga Vel சமாதியில் படையல் செய்து விடியலுக்கு வழி காண்போம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X