பொது செய்தி

இந்தியா

ஒமைக்ரான் பாதித்தோரின் தொடர்பில் இருந்த 200 பேரிடம் பரிசோதனை; சிலருக்கு கோவிட் உறுதி

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம்
Karnataka, Omicron Cases, Primary Contacts, Traced, Some Tested Positive, Official, கர்நாடகா, ஒமைக்ரான், தொடர்பு, பரிசோதனை, கோவிட் தொற்று, உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு, 'ஒமைக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. 'இந்த வகை தொற்று 30க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதால், வேகமாக பரவும் தன்மை உடையது' என ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். நம் நாட்டில் ஒமைக்ரான் வகை தொற்று முதன்முதலில் கர்நாடகாவில் கண்டறியப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 வயது நபர் மற்றும் உள்ளூரை சேர்ந்த 46 வயது டாக்டருக்கு ஒமைக்ரான் வகை தொற்று 2ம் தேதி கண்டறியப்பட்டது.


latest tamil news



இதனைத்தொடர்ந்து குஜராத், மஹாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யும் முயற்சியில் அந்தந்த மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட இருவரின் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 200 பேரை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தொற்று உறுதியானவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய அவர்களின் மாதிரிகளை பகுப்பாய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
06-டிச-202122:25:47 IST Report Abuse
Bismi கடந்த ஒரு மாதத்தில் ஆப்பிரிக்காவில் இருந்தால், கட்டாய பரிசோதனை செய்து குவாரன்டைன் செய்ய வேண்டும். இன்னொரு பரவலை இந்தியா தாங்காது. அரசு தூங்காமல் உடனே செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
06-டிச-202119:55:25 IST Report Abuse
Tamilan இவையனைத்தும் புதிய கட்டுப்பாடுகள், அனைவரையும் பரிசோதிக்கும் நடைமுறைக்கு பின் தெரிந்தவை . இதில் தெரியாது எதனை . பரிசோதனைகல் ஆரம்பிக்கும் முன் இதனை பேருக்கு இருந்தது . அதிலிருந்து எதனை பேருக்கு பரவும் ?. அனைத்தும் இனியொரு பீதியையாவது கிளப்பிக்கொண்டிருக்கிறது
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-202116:17:18 IST Report Abuse
Vittalanand சும்மா கப்சா அடிக்கிறார்களால். ஓமிசரோனுக்கும் கோவிடுக்குமான வேறுபாடு வலை தளத்தில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X