லக்னோ: ‛‛அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மக்கள் பெற முடியவில்லை,'' பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று (டிச., 6) அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:

மாநிலத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நாள்தோறும் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகளை நாம் பார்ப்பதில்லை. நலிந்த மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் ஊடகங்களை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது உ.பி., மாநில பா.ஜ., அரசுக்குத் தெரியும்.
அம்பேத்கர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மக்கள் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் ஆளும் மத்திய, மாநில அரசுகளின் அக்கறையின்மைதான்.
மத்திய, மாநில அரசுகள் சாதிய மனப்பான்மையோடு இயங்குவதால் தான் நலிந்த மக்களுக்கு வழங்க அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது. இவ்வாறு மாயாவதி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE