பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மிதக்கும் தென்மாவட்டங்கள்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று (டிச.,5) இரவு முதல் அதிகாலை வரை தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2
தண்ணீரில் மிதக்கும் தென்மாவட்டங்கள்

மதுரை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று (டிச.,5) இரவு முதல் அதிகாலை வரை தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு முதல் காலைவரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தேனியில் விவசாய நிலங்களில் நீர் தேங்கியதால், பயிர்கள் மூழ்கின.


latest tamil news



திருச்சி:


திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இன்று காலையில் மிக கனமழை பெய்தது. வெறும் 3 மணிநேரத்தில் 27 செ.மீ., மழைப் பதிவானது. இதனையடுத்து அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோரையாறு மூலமாக காவிரி ஆற்றில் வந்து சேரும் நிலை உள்ளதால், அரியாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202104:18:25 IST Report Abuse
J.V. Iyer ஒரு நல்ல ஆட்சி மக்களுக்கு கஷ்டம் வரும் முன் செயல்படவேண்டும். அதை பாஜக ஒரு கட்சியினால்தான் கொடுக்க முடியும். இந்த திராவிட கட்சிகளின் லட்சணங்கள் ஊரறிந்ததே. இருந்தாலும் இவர்கள் ஆட்சி வேண்டுமென்றுதானே விரும்பி வோட்டு போட்டார்கள்? இப்போது பாஜக வந்தாலும், இவர்கள் போட்ட முடிச்சை அவிழ்க்க இன்னும் பல காலங்கள் ஆகும்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202121:43:59 IST Report Abuse
Sriram V எங்க போட்டோ எடுக்க ஒருத்தர் வருவாரே அவர கூப்பிடுங்க
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
06-டிச-202121:33:24 IST Report Abuse
Oru Indiyan ஆட்சியில் இருக்கும் மனிதர்களுக்கு சென்னை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். மற்ற மாவட்டங்கள் , வாக்குக்கு மட்டுமே தேவை. அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே டம்மி பீஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X