டெல்டா வைரஸை விட ஒமைக்ரானின் தீவிரம் குறைவு; அமெரிக்க அதிபரின் ஆலோசகர்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கிறது,'' என்று அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் கோவிட் வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள் ஆப்ரிக்காவிலிருந்து வரும்
Omicron,Less Intensity, Delta Virus, United States, President, Adviser, டெல்டா வைரஸ், ஒமைக்ரான், தீவிரம், குறைவு, அமெரிக்க அதிபர், ஆலோசகர், நம்பிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைந்ததாகவே இருக்கிறது,'' என்று அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கோவிட் வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள் ஆப்ரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.


latest tamil news



அமெரிக்காவிலும் ஒமைக்ரான் மெல்லப் பரவி தற்போது 3 மாகாணங்களில் பாதிப்பு அதிகரித்துவிட்டது. ஆனால், ஆபத்தான டெஸ்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது என்று அமெரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி பவுசி கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.


latest tamil news



ஆனால், தீவிரம் குறைந்ததா? அல்லது உண்மையிலேயே ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா?, டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானதா? அல்லது ஆபத்து மிகுந்ததா? என்பதை மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்தே முடிவு செய்ய வேண்டும்.

தற்போது ஆப்ரிக்க மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தடைகள் நீக்கப்படும். தென் ஆப்ரிக்கா மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உண்மையில் கடினமான சூழலைத்தான் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-202102:29:47 IST Report Abuse
Ramesh Sargam 0............
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-டிச-202116:08:03 IST Report Abuse
A.George Alphonse ஒவ்வொரு நாலும் ஒவ்வொருவரும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களை துள்ளி விவரமாக ஆராயாமல் அறிக்கை விடுவதே order of the day ஆகிவிட்டது. யாரை நம்புவது,யார் சொல்லுவது சரி என்று மக்களை குழப்புகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X