பொது செய்தி

இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடந்தது எப்படி?; பார்லி.,யில் அமித்ஷா விளக்கம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (15+ 3)
Share
Advertisement
புதுடில்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் விளக்கமளித்துள்ளார்.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மான் மாவட்டத்தின் ஒடிங்கில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த மக்கள்,
Nagaland, Parliament, AmitShah, Explains, LokSabha, நாகாலாந்து, துப்பாக்கிச்சூடு, பார்லிமென்ட், லோக்சபா, அமித்ஷா, விளக்கம்

புதுடில்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் விளக்கமளித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மான் மாவட்டத்தின் ஒடிங்கில், பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில், சுரங்கத் தொழிலாளர்கள், கிராம மக்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த மக்கள், பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் வன்முறை சூழல் ஏற்பட்டதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் முடக்கப்பட்டது.


நாகாலந்து துப்பாக்கிசூடு நடந்தது எதனால்? லோக்சபாவில் அமித்ஷா விளக்கம்!

latest tamil newsஇந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பார்லி.,யில் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: ஒடிங்க்-ல் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான பகுதியில் 21 வீரர்கள் பதுங்கியிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது. ஆனால், வாகனம் நிற்காமல் தப்பி செல்ல முயன்றதால், பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டால் வாகனத்தில் பயணித்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். தவறாக நினைத்து சுடப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. காயமடைந்த 2 பேரையும் நமது வீரர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், உள்ளூர் கிராம மக்கள் ராணுவ வீரர்களை சுற்றி வளைத்து, 2 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதன் விளைவாக, பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் மரணமடைந்தார், பல வீரர்கள் காயமடைந்தனர்.


latest tamil news


தற்காப்புக்காகவும், கூட்டத்தை கலைக்கவும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால், மேலும் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்தனர். உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்றனர். தற்போதைய சூழ்நிலை பதட்டமான சூழ்நிலை இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று (டிசம்பர் 5) நாகாலாந்து டி.ஜி.பி., மற்றும் கமிஷனர் அந்த இடத்தை பார்வையிட்டனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நிலைமையை கருத்தில் கொண்டு, மாநில குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஒரு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் மரணத்திற்கு ராணுவம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ராணுவ உயர்மட்டத்தில் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மாநில கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோரை தொடர்பு கொண்டேன்.

பயங்கரவாதிகளை தடுக்கும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும் போது எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-டிச-202122:29:09 IST Report Abuse
Kasimani Baskaran வாகனத்தை நிறுத்தச்சொன்னால் நிறுத்துவதை விட்டு விட்டு தப்பி ஓடுவது சரியல்லவே...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
06-டிச-202121:10:50 IST Report Abuse
J.Isaac ஆருர் அவர்களே பாவாடைகள் வந்து தென் இந்தியாவில் வந்து கல்வியை கொடுத்து மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை என்றால் இன்னும் நூலின் கொட்டம் அடங்கியிருக்கிறது. இன்னும் பீஹார், உ.பியை போல தான் இருக்கும்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-202118:37:03 IST Report Abuse
Janarthanan முதல் சம்பவம் வண்டி நிறுத்தமால் போனதால் தப்பி செல்ல முயன்றதால் எடுக்க பட்ட நடவடிக்கை... ரெண்டாவது சம்பவம் உள்ளூர் கிராம மக்கள் ராணுவ வீரர்களை சுற்றி வளைத்து, 2 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதன் விளைவாக, பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் மரணமடைந்தார், பல வீரர்கள் காயமடைந்தனர்...தற்காப்புக்காகவும், கூட்டத்தை கலைக்கவும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது ... இங்கு ஆடு திருடுபவர்கள் போலீஸ் கொலை செய்த பிறகு தற்காப்பு பற்றி பேசிகிட்டு இருந்தோமே ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X