அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி போட்டியின்றி தேர்வு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்; இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
ADMK, OPS, EPS, அதிமுக, ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி, போட்டியின்றி தேர்வு

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா மறைவுக்கு பின், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும்; இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இப்பதவிக்கு உரியவர்களை, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர்; வழக்கு நிலுவையில் உள்ளது.


latest tamil news


இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம், தலைமையகத்தில் நடந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு முறையில், இணைந்தே தேர்வு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், நேற்று முன்தினம் அப்பதவிகளுக்கு இணைந்தே மனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த நிலையில், வேட்பு மனுவை வாபஸ் பெறும் கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.


latest tamil news


இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிப்பை அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன் வெளியிட்டார். அதன்படி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியிட வேண்டி, ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இருவரும் அப்பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பொன்னையன் அறிவித்தார். பின்னர், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Navarajan - Coimbatore ,இந்தியா
07-டிச-202100:28:14 IST Report Abuse
A.Navarajan கவுண்டமணி, செந்தில் , ( பன்னீர், பழனிசாமி) சபாஷ் பொருத்தமான அடைமொழி. ஆனால் வருத்தப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் காமடியன்களால் வில்லன் ( திமுக) ஆட்சிக்கு வந்தது தான் மிச்சம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-டிச-202123:58:11 IST Report Abuse
Vijay D Ratnam சரி சரி கட்சிக்குள்ள இனி மன்னார்குடி மாஃபியா உள்ளே புகாமல் வெரட்டி அடிங்க. விட்டால் மன்னார்குடி மாஃபியா அப்பால கோபாலபுர மாஃபியா ரேஞ்சுக்கு அதகளம் பண்ண தொடங்கிடும். சிவகங்கை மாஃபியா போல இனி மன்னார்குடி மாஃபியா ஆட்டமும் அடங்கிடும். அடுத்து தமிழக மக்கள் ஆப்பு வைக்க வேண்டியது ஒன அண்ட் ஒன்லி கோபாலபுர மாஃபியாவைத்தான்.
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
06-டிச-202123:35:41 IST Report Abuse
Thirumurugan அதிமுகவில் இருக்கும் தொண்டர்கள் ஒருத்தருக்கூடவா யோசிக்கும் திறன் இல்லை? இது என்ன கள்ள ஆட்டம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X