கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு ‛கோவிட்'

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிக்மகளூர்: கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 11 ஆசிரியர்கள் உட்பட 107 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவரும் சூழலில், தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான 'ஒமைக்ரான்' பரவத் துவங்கியுள்ளது. நாட்டிலேயே முதல் பாதிப்பாக கர்நாடகாவில் இருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, குஜராத்,
Karnataka, School, Covid, Positive, Chikkamagalur, Residential School, கர்நாடகா, பள்ளி, கொரோனா, மாணவர்கள், ஆசிரியர்கள், கோவிட், கொரோனா,

சிக்மகளூர்: கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 11 ஆசிரியர்கள் உட்பட 107 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவரும் சூழலில், தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான 'ஒமைக்ரான்' பரவத் துவங்கியுள்ளது. நாட்டிலேயே முதல் பாதிப்பாக கர்நாடகாவில் இருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, குஜராத், மஹாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் கண்டறியப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. ஒமைக்ரான் பரவுவதால், அனைத்து மாநிலங்களிலும் கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்க அந்தந்த மாநில அரசுகள் ஆலோசித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 69 மாணவர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 38 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒரே பள்ளியில் 107 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 11 ஆசிரியர்களும் அடங்கும். அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள கர்நாடகாவில், ஒரே பள்ளியில் அதிகமானோர் கோவிட் தொற்றுக்கு ஆளானது அச்சமடையச் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-202102:24:45 IST Report Abuse
Ramesh Sargam 0...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X