பொது செய்தி

இந்தியா

ஹிந்து மதத்திற்கு மாறிய வக்பு வாரிய முன்னாள் தலைவர்

Added : டிச 06, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
லக்னோ: உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றினார்.உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த வசீம் ரிஸ்வி, குர்ஆனில் இருந்து வன்முறையைப் போதித்ததாகக் கூறி, சில வசனங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்
UP, Shia Waqf Board, Chief, Waseem Rizvi, Converts, Hinduism, வக்பு வாரியம், முன்னாள் தலைவர், வசீம் ரிஸ்வி, ஹிந்து மதம், மாற்றம்

லக்னோ: உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதத்திற்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றினார்.

உத்தரபிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்த வசீம் ரிஸ்வி, குர்ஆனில் இருந்து வன்முறையைப் போதித்ததாகக் கூறி, சில வசனங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், வழக்கு தொடர்ந்த வசீம் ரிஸ்விக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாற முடிவு செய்தார்.


உத்தரப்பிரதேச ஷியா வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி. Waseem Rizvi அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். வன்முறையை தூண்டும் வகையில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள சில போதனைகளை நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வசீம் ரிஸ்வி வழக்கு போட்டதால் எதிர்ப்பு தீவிரமானது. முகம்மது நபிகளை பற்றி சர்ச்சை கருத்துகளுடன் கூடிய புத்தகத்தை எழுதிய பிறகு மிரட்டல்கள் வர தொடங்கின. இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், வசீம் ரிஸ்வி காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி Dasna Devi கோயிலுக்கு சென்றார். இந்து மதத்துக்கு மாறினார். கோயில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் சுவாமிகள் Narsinghanand மதமாற்ற சடங்குகளை செய்தார். பல சாதுக்கள் முன்னிலையில் நடந்த இந்த சடங்குகளின்போது, வசீம் ரிஸ்விக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. இந்துவாக மதம் மாறிய வசீம் ரிஸ்விக்கு ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி Jitendra Narayan Singh Tyagi என பெயர் சூட்டுவதாக, நரசிங்கானந்த் சுவாமிகள் அறிவித்தார். மதமாறிய பிறகு ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி காவி உடை அணிந்தபடி கோயிலில் யாகம் வளர்த்து பூஜை செய்தார். ''இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு எனது தலைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசுத்தொகை அதிகரிக்க தொடங்கியது; இன்று இந்து மதத்துக்கு மாறியிருக்கிறேன்; இனி இந்து மத வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி கூறினார்

latest tamil newsஅதன்படி, காசியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரி சுவாமி யத்தி நரசிங்கானந்த் என்பவர் முன்னிலையில், வசீர் ரிஸ்வி ஹிந்து மதத்திற்கு மாறினார். ஹிந்து மதத்திற்கு மாறியதுடன் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றிக்கொண்டார். இது குறித்து பேசிய ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி, 'நான் இஸ்லாம் மதத்தில் இருந்து நீக்கப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் தலைக்கு பரிசுத் தொகை அதிகரிக்கப்படுகிறது. இன்று நான் சனாதன தர்மத்தைத் தழுவுகிறேன்,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh - Chennai,இந்தியா
08-டிச-202115:49:34 IST Report Abuse
Venkatesh ஏன் அப்புசாமி, மத்த மதத்திலெல்லாம் ஜாதிகள் இல்லையா, இல்லை உனக்கு தெரியலையா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறியா. முஸ்லீம் மதத்துல ஷியா மற்றும் சன்னி மக்கள் வெட்டிக்கொள்கிறார்கள்.. முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிந்து பேசுங்கள். மக்களை நெறி படுத்த ஜாதிகள் உருவாக்கப்பட்டது ஆனால் சிலர் அதை வெறி கொள்வதற்காக மாற்றி கொண்டுள்ளார்கள்.
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
08-டிச-202115:49:12 IST Report Abuse
Venkatesh PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
07-டிச-202108:07:19 IST Report Abuse
அப்புசாமி Please don't repeat the same comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X