பொது செய்தி

தமிழ்நாடு

கனிமம் கடத்தியவருக்கு ரூ 20 கோடி அபராதம்: சப் கலெக்டர், மாவட்ட எஸ்.பி.,அதிரடி மாற்றம்

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
திருநெல்வேலி: கல்குவாரியில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான மதிப்புள்ள கனிமவளம் கடத்தப்பட்டுள்ளது. இதனை கண்டறிந்து ரூ 20 கோடி அபராதம் விதித்த சப் கலெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். லாரிகளை பறிமுதல் செய்த எஸ்.பி., மணிவண்ணனும் மாற்றப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன.
Rs 20 Crore, Fine, Mineral Smuggler, Sub-Collector, District SP, Change, Action, THIRUNELVELI, கனிமம், கடத்தல், ரூ20கோடி, அபராதம், சப் கலெக்டர், திருநெல்வேலி மாவட்ட எஸ்பி, அதிரடி, மாற்றம்,

திருநெல்வேலி: கல்குவாரியில் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான மதிப்புள்ள கனிமவளம் கடத்தப்பட்டுள்ளது. இதனை கண்டறிந்து ரூ 20 கோடி அபராதம் விதித்த சப் கலெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். லாரிகளை பறிமுதல் செய்த எஸ்.பி., மணிவண்ணனும் மாற்றப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம், இருக்கன்துறை பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் செயல்படுகின்றன. தி.மு.க.,பிரமுகர்களுக்கு சொந்தமான கல்குவாரிகளில் புவியியல் துறையில் பெறப்பட்ட நடைச்சீட்டு அளவை விட அதிக அளவு கனிமவளம் வெட்டி எடுத்து கடத்தப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.


latest tamil news


இரவு, பகலும் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த தோட்டாக்களை வெடித்து பாறைகளை தகர்ப்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அண்மையில் சீலாத்திகுளத்தில் கல்குவாரியில் வெடிவைத்த அதிர்வினால் வீடு இடிந்து விழுந்து ஒரு குழந்தை பலியானது.

மேலும் அரசு அனுமதியளித்ததை விடவும் அதிக கற்கள் பாரம் ஏற்றிச்செல்வதால் ரோடுகள் முழுக்க உடைந்து சேதமடைந்துள்ளன. ராதாபுரம் வட்டார கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமவளம் முழுவதும் போலியான நடைச்சீட்டுகள் மூலம் கேரள மாநிலம் கொண்டு செல்லப்படுகின்றன.

கேரளாவில் கட்டுமான பணிகள் நடக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு இங்கிருந்து தான் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன. இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனைகள் நடத்தி லாரிகளை பறிமுதல் செய்தார்.

இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பரது பெயரில் இயங்கும் ஒரு கல்குவாரியில் நடத்திய சோதனையில் 4 லட்சத்து, 3 ஆயிரத்து, 824 கனமீட்டர் கனிமவளம் நடைச்சீட்டின்றி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனத்திற்கு 20 கோடியே, 11 லட்சத்து, 64 ஆயிரத்து, 352 ரூபாய் அபராதம் விதித்தார்.

நேர்மையான அதிகாரிகளான திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எஸ்.பி.,மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு கனிமவள கடத்தல் லாரிகளை பறிமுதல் செய்தனர். தி.மு.க.,பிரமுகர்கள் பினாமி பெயரில் நடத்தும் குவாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., பிரமுகர்கள் அண்மையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தியை டிரான்ஸ்பர் செய்தனர். கனிமவள கடத்தல் லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்ததால் திருநெல்வேலி எஸ்.பி., மணிவண்ணனும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற சரவணன், கல்குவாரி கனிமவள கடத்தல் போன்ற பிரச்னைகளால் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார். தம்மை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திற்கு தகவல் சொல்லி பின்னர் பொறுப்பேற்றார்.

நேர்மையாக செயல்படும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவையும் மாற்ற தி.மு.க., பிரமுகர்கள் மேலிடத்திற்கு பிரஷர் அளித்து வருகின்றனர். இதனிடையே அனுமதியின்றி இருக்கன்துறையில் கனிமவளம் கடத்தியதற்காக ரூ 20 கோடி அபராதம் விதிக்கப்பட்ட இசக்கியப்பன் என்பவரை நாளை (டிச.,7 ம் தேதி) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வேறு சில நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-டிச-202115:59:41 IST Report Abuse
Barakat Ali பணத்தை வாங்கிக்கொண்டு ஒட்டு போட்ட பிறவிகளால் மாநிலம் நாசமாகப்போகிறது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202100:19:29 IST Report Abuse
Bhaskaran விடியல் இப்படித்தான்
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
07-டிச-202115:24:44 IST Report Abuse
Ramesh இறையன்பு Sir, கலக களை.1திருத்த முடியாது. இறை யாலும் முடியாது,அன்பாலும் முடியாது. 2ம சேர்ந்தும் முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X