பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்; முதல்வர் வேட்பாளரானால் நிச்சயம் வெல்வேன்..! அம்ரீந்தர் சிங் உறுதி

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெல்வேன் என முன்னாள் காங்., முதல்வர் அம்ரீந்தர் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மூத்த காங்., தலைவர் அம்ரீந்தர் சிங் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நிச்சயம் வெல்வேன் என முன்னாள் காங்., முதல்வர் அம்ரீந்தர் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



latest tamil news



பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மூத்த காங்., தலைவர் அம்ரீந்தர் சிங் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண உள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரசுக்குள் நீண்டகாலமாக உட்கட்சிப் பூசல் ஏற்பட்டு வந்தது. மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகாலமாக பஞ்சாப் காங்கிரஸ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் அம்ரீந்தர் சிங். இவர் தற்போது தனது ஆதரவாளர்களுடன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தான் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
இந்த தேர்தல் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ள இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மிகப்பெரும் போட்டியாக அம்ரீந்தர் சிங் துவங்கியுள்ள பஞ்சாபில் லோக் காங்கிரஸ் விளங்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் காங்கிரஸின் வாக்குகளை இம்முறை பாஜக தவிர ஆம் ஆத்மி மற்றும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இது தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனை ஈடுகட்ட தற்போது பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பதவிக்கு அமரீந்தர் சிங் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


latest tamil news



இதனை கூட்டணி பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யவேண்டும் என்று அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலுக்கு வெறும் 14 நாட்களுக்கு முன்னர் லோக்சபா உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிட்டு வென்றதாக கூறிய அம்ரீந்தர் சிங், எதிர் வரும் பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் ஒரு வேளை கடைசி நேரத்தில் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் சக போட்டியாளர்கள் உடன் மோதத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
06-டிச-202123:32:23 IST Report Abuse
Thirumurugan பிஜேபியின் கூட்டணியா? நல்லது நல்லது அதை செய்யுங்கள். அப்பொழுதான் பஞ்சாப் (உங்கள்) மக்கள் உங்களை தூக்கி எறிவார்கள். எழுநூறு விவசாயிகள் தங்களுடைய இன்னுயிரை போராட்டத்தின்போது பறிகொடுத்தார்கள். அதற்கு இந்த மத்திய அரசாங்கம் ஓரு இரங்களைக்கூட தெரிவிக்கவில்லை. இவர்களா மக்களுக்காக உழைக்கப்போகிறார்கள்? உபி தேர்தலை மனதில் கொண்டு விவசாய சட்டங்களை திரும்ப பெற்றிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் 80 வமதில் முதல்வர் கனவு!!!.: ஆசையைப் பாரு!!. ஆசை என்றாலும் ஓகே. ஆனால் பதவி வெறியல்லவா பிடித்தாட்டுகிறது.
Rate this:
Cancel
06-டிச-202121:27:21 IST Report Abuse
அப்புசாமி கெழ போல்ட்டெல்லாம் முண்டும் முதல்வராகணும்னு நினைக்குதுங்க... பஞ்சாப்ல யாரைப் பாத்தாலும் வயோதிகர் மாதிரிதான் இருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X