பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : டிச 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டிச., 7, 1939சென்னையில், 1939 டிசம்பர் 7ல் பிறந்தவர், எல்.ஆர்.ஈஸ்வரி; இயற்பெயர், லுார்துமேரி ராஜேஸ்வரி. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.கடந்த, 1958ல் வெளியான, நல்ல இடத்து சம்பந்தம் என்ற படத்தில், பின்னணி பாடகியாக அறிமுகமானார். பாசமலர் படத்தில், 'வாராயென் தோழி...' என்ற பாடல், இவருக்கு புகழை தேடி தந்தது. 'பளிங்கினால் ஒரு மாளிகை, குடிமகனே, எலந்த

இதே நாளில் அன்று


டிச., 7, 1939



சென்னையில், 1939 டிசம்பர் 7ல் பிறந்தவர், எல்.ஆர்.ஈஸ்வரி; இயற்பெயர், லுார்துமேரி ராஜேஸ்வரி. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.கடந்த, 1958ல் வெளியான, நல்ல இடத்து சம்பந்தம் என்ற படத்தில், பின்னணி பாடகியாக அறிமுகமானார். பாசமலர் படத்தில், 'வாராயென் தோழி...' என்ற பாடல், இவருக்கு புகழை தேடி தந்தது. 'பளிங்கினால் ஒரு மாளிகை, குடிமகனே, எலந்த பழம், முத்துக் குளிக்க வாரீகளா...' உட்பட, 1,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளிலும் பின்னணி பாடியுள்ளார்.இவர் பாடிய, 'கற்பூர நாயகியே, செல்லாத்தா, மாரியம்மா எங்கள் மாரியம்மா...' உள்ளிட்ட அம்மன் பக்தி பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் இவர் கச்சேரிக்கு கடலூரில் பெரும் கூட்டம் சிறுவர்கள் மரத்தின் மேலெல்லாம் ஏறி நின்று பார்த்தார்கள் ஒரு கிளை ஒடிந்து சில சிறுவர்கள் விழுந்தார்கள் ஆனால் நல்லவேளை அடிபடாததால் போலீஸ் லத்திக்கு தப்பினார்கள்
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
07-டிச-202123:42:48 IST Report Abuse
THINAKAREN KARAMANI 'கற்பூர நாயகியே' என்று பாடி எங்களைப் பக்திக்கடலில் மூழ்கடித்த எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X