பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ரூ.825 லட்சம் கோடியாக உயரும்

Updated : டிச 08, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :'இந்திய பொருளாதாரம் அடுத்த 11 ஆண்டுகளில் 825 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி அடையும்; அதில் பெரும்பான்மை பங்களிப்பை 'டிஜிட்டல்' வர்த்தகம் வழங்கும்' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'டிஜிட்டல்' சந்தைஅமெரிக்க - இந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணய சந்தையை நிர்வகிக்கும் 'கிராஸ் டவர்' நிறுவனமும்
இந்தியா, பொருளாதாரம், ரூ.825 லட்சம் கோடி,

புதுடில்லி :'இந்திய பொருளாதாரம் அடுத்த 11 ஆண்டுகளில் 825 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி அடையும்; அதில் பெரும்பான்மை பங்களிப்பை 'டிஜிட்டல்' வர்த்தகம் வழங்கும்' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'டிஜிட்டல்' சந்தைஅமெரிக்க - இந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பும், 'கிரிப்டோகரன்சி' எனும் மெய்நிகர் நாணய சந்தையை நிர்வகிக்கும் 'கிராஸ் டவர்' நிறுவனமும் இணைந்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2013ல் இந்திய டிஜிட்டல் சந்தை மதிப்பு 11 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 225 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வரும் 2024 - 25ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 375 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைய மெய்நிகர் நாணய சந்தை உள்ளிட்ட டிஜிட்டல் வர்த்தகம் பெருமளவு உதவும்.

அடுத்த 11 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம், 825 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி அடையும். இதில் பெரும்பான்மை பங்களிப்பை டிஜிட்டல் வர்த்தகத்தின் புதிய கண்டுபிடிப்புகள் வழங்கும். 'வெப் 3.0' மற்றும் 'பிளாக் செயின்' தொழில்நுட்பங்கள் வாயிலாகவே இந்த வளர்ச்சி கிடைக்கும். ஆனால், அதற்கு சரியான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில், இணைய பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியில் இருந்து 100 கோடியாக அதிகரிக்க ஏழரை ஆண்டுகள் ஆயின. இதே வளர்ச்சியை 'பிட்காய்ன்' போன்ற மெய்நிகர் நாணயங்கள் புழங்கும் சந்தைகள் நான்கு ஆண்டுகளில் எட்டி விடும்.


ஆடம்பர பொருட்கள்தற்போது ஓவியம், டிக்கெட் விற்பனை, ஆடம்பர பொருட்கள், பொழுது போக்கு சேகரிப்புகள், பூஞ்சையால் பாதிக்கப்படாத 'டோக்கன்'கள் போன்றவை டிஜிட்டல் வடிவில் வெளியாகி, மக்களின் அன்றாட பயன்பாடுகளை மாற்றி அமைத்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07-டிச-202123:11:01 IST Report Abuse
Vijay D Ratnam 2019 மே மாதம் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவி ஏற்ற போது இந்திய பொருளாதாரத்தை ஐந்து டிரில்லியன் டாலராக உயர்த்துவதே லட்சியம் என்றார். எந்த நேரத்தில் சொன்னாரோ அடுத்த மூன்று மாதத்தில் சீனாவால் உருவாக்கப்பட்டு உலக பொருளாதாரத்தை நாசமாக்க உலகம் முழுக்க பரப்பிவிடப்பட்ட கொரோனா பேயாட்டத்தை ஆரம்பித்தது. ஒட்டுமொத்த தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, வணிகம் எல்லாம் மரண அடி வாங்கியது. உலக பொருளாதாரமும் பாதாளத்துக்கு போனது. அப்படி ஒரு மோசமான காலகட்டத்திலும் இந்த கொரோனாவையும் தாண்டி இந்திய பொருளாதாரம் மெதுவாக வளர்ந்து கிட்டத்தட்ட மூன்று ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தாண்டி நிற்பது பெரிய சாதனைதான். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கையில் இருக்கிறது நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் முன் இந்திய பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியனை தாண்டும் என்றே தோன்றுகிறது சுதந்திரதுக்கு பிறகான இந்தியாவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாவை, சி.சுப்ரமண்யத்தை சிறந்த நிதியமைச்சர் என்று சொல்வார்கள். அதன் பிறகு ஒரு சிறந்த நிதியமைச்சர் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நிர்மலா சீதாராமன்தான். இடையில் சில தத்திகள், தற்குறிகள், நாம் அறிவாளி என்று நினைத்த அரைவேக்காடுகள், நம்ம ஒயிட் காலர் கிரிமினல் கையில் எல்லாம் சிக்கி நிதியமைச்சகம் படாத பாடு பட்டு இருக்கிறது. பார்ப்போம் 2024 ல் ஐந்து ட்ரில்லியன் கடந்து 2029 ல் இந்திய பொருளாதாரம் பத்து ட்ரில்லியன் டாலரை தாண்டி அமெரிக்காவுக்கு செக் வைக்கிறதா என்று..
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
07-டிச-202120:18:07 IST Report Abuse
Tamilan ஏன் 826 அல்லது 1000 லச்சம் கொடிகள் ஆகாது ?. பேப்பரில் எழுதிக்காட்டுவதில் என்ன சிரமம் . இதிலும் அரசை மிரட்டி மக்கள் பணத்தை பல மடங்கு கொள்ளையடிக்கும் பொருளாதார குண்டர்களின் சூழ்ச்சி .
Rate this:
Cancel
07-டிச-202111:45:24 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற அரசு போல அமைச்சர்கள் மீது லஞ்சப் புகார்கள் இல்லை. லட்சம் கோடி ஊழல்கள் இல்லை 👌. இது தொடர்ந்தால் நாட்டில் சுபிட்சம் தானே வருமே . ஆனால் ஏழைகளே இல்லாத நாடு சாத்தியமல்ல. ஏனெனில் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் ஒரு சில சதவீதம் முட்டாள்கள் பிறந்து😇 கொண்டுதானிருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X