பொது செய்தி

இந்தியா

ஏ.டி.எம்., கட்டணம் ஜன., 1 முதல் உயர்கிறது

Updated : டிச 08, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி :வங்கி ஏ.டி.எம்.,களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட, அதிகமான முறை பணம் எடுப்போருக்கு, அடுத்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மாதமும் ஏ.டி.எம்., மையங்களில் குறிப்பிட்ட முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க, வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி அந்த வரம்பை கடந்துவிட்டால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை
ஏ.டி.எம்., கட்டணம் ஜன.,1 முதல் உயர்கிறது

புதுடில்லி :வங்கி ஏ.டி.எம்.,களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட, அதிகமான முறை பணம் எடுப்போருக்கு, அடுத்த மாதம் முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.ஒவ்வொரு மாதமும் ஏ.டி.எம்., மையங்களில் குறிப்பிட்ட முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க, வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.


அனுமதி



அந்த வரம்பை கடந்துவிட்டால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அப்படி வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஒரு மாதத்திற்கான வரம்பை மீறி ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்போருக்கு, வரும் ஜன., 1ம் தேதி முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கணக்கு உள்ள வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் மாத வரம்பை மீறி பணம் எடுப்போரிடம் இருந்து, இதுவரை ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு
வந்தது. இனி, 21 ரூபாயாக அது வசூலிக்கப் பட உள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு கணக்கு உள்ள வங்கியின் ஏ.டி.எம்.,களில், ஐந்து பணப் பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் இலவசமாக செய்து கொள்ளலாம்.


பணப் பரிவர்த்தனை



சில விதிகளுடன் வேறு வங்கி ஏ.டி.எம்.,களிலும் இலவசமாக பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ நகரங்களில் மூன்று பணப் பரிவர்த்தனைகளுக்கும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண மாற்றம் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து நினைவுபடுத்தி வருகின்றன.


2.13 லட்சம் ஏ.டி.எம்.,



மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பாகவத் கராட் நேற்று லோக்சபாவில் கூறியதாவது: நம் நாட்டில் செப்., நிலவரப்படி இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 145 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இதில் 47.4 சதவீத ஏ.டி.எம்., மையங்கள், கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இயங்கி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-202119:54:20 IST Report Abuse
அப்புசாமி நம்ம கணக்குல இருக்கற பணத்தை நாம எடுக்க நம்ம கிட்டேயே உருவும் கேவலம் இந்தியாவில் தான்.டெபிட் வெச்சிரிந்தாலே வருஷம் 250, 300 ரூவா ஃபீஸ் வேறே... தவிர மினிமம் பேலன்ஸ் வெக்கலேன்னா இருக்கறதை உருவி ஜீரோ பேலன்ஸுக்கு கொண்டாந்துருவாங்க. ஏழப்பங்காளிகள் ஆட்சி நடக்குது
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
07-டிச-202114:37:13 IST Report Abuse
PKN மீதில் ATM இருக்குமிடத்தை ஒழுங்கா சுத்தம் செய்ங்க. தூய்மையான வைத்திருக்க முயலுங்கள். 99% ATM மைய்யங்கள் குப்பைகளுக்கு புகழிடமாகவும் நோய் பரப்பும் மைய்யமாகவும் விளங்குகிறது. பணம் /செல்வம் கடவுள் லக்ஷ்மிக்கு உரியது. பணம் புழங்கும் லக்ஷ்மி வசிக்கும் இடம் துய்மையில்லாமல் குப்பைகூழமாக இருக்க எப்படி இந்த அரசு (இந்துக்களின் காவலன்) அனுமதிக்கிறது.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
07-டிச-202113:12:18 IST Report Abuse
தத்வமசி அரசு வங்கிகளில் ஏடிஎம் மிசின்கள் சரிவர வேலை செய்யவில்லை. ஆன்லைன் பரிவர்த்தனைகள் சுத்த மோசம். நடுத்தர மக்கள் தான் வங்கிகளில் பணத்தை வைத்து, ஏடிஎம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலவழிப்பார்கள். அப்படி பார்த்தால் இவர்களை வங்கியில் பணம் வைக்காதீர்கள் என்று கூறுகிறீர்களா ? அல்லது வங்கியின் செலவினங்கள் அதிகமாகி விட்டனவா ? வேலை செய்யாமல் கதை அளந்து கொண்டிருக்கும் சுமார் பத்து முதல் இருபது சதவிகித ஊர்வம்பு பேசும் மக்களை வேளையில் இருந்து எடுத்து விடவும். வங்கியில் ஆட்களை குறைத்து ஏடிஎம் மிசின்களையும் ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் திறம்பட கையாள உறுதியான ஏற்பாடுகளையும் செய்யவும். தானாகவே மக்கள் வங்கிப் பக்கம் வரமாட்டார்கள். உங்களின் செலவினங்கள் குறையும். மக்களின் பணத்தை சுரண்ட தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X