இந்தோனேஷியாவில் செமேரு எரிமலை வெடிப்பு; 15 பேர் பலி..!

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021
Share
Advertisement
இந்தோனேசியாவின் செமேரு எரிமலை உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இந்த எரிமலை வெளியிட்ட எரிமலைப் நச்சுப்புகை காரணமாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேரின் நிலை குறித்த தகவல் தெரியவில்லை. இந்தப் புகை காரணமாக ஜாவா தீவில் வெண்மேகங்கள் கருமையாக காட்சியளித்தன.நேற்று வெளியான இந்த கரும்புகை செமேரு எரிமலையைச் சுற்றி 4 கிலோ மீட்டர்

இந்தோனேசியாவின் செமேரு எரிமலை உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இந்த எரிமலை வெளியிட்ட எரிமலைப் நச்சுப்புகை காரணமாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 27 பேரின் நிலை குறித்த தகவல் தெரியவில்லை. இந்தப் புகை காரணமாக ஜாவா தீவில் வெண்மேகங்கள் கருமையாக காட்சியளித்தன.



latest tamil news




நேற்று வெளியான இந்த கரும்புகை செமேரு எரிமலையைச் சுற்றி 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரவியது. இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அல்லது பொதுமக்களும் பயணிக்கவேண்டாம் என்று இந்தோனேஷிய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று (டிச. 06) மதியம் மூன்று மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்ததால் வானம் இருட்டி இரவுபோலக் காட்சி அளித்ததாக அப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். செமேரு எரிமலைக்கு அருகே உள்ள மணல் குவாரியில் உள்ள தொழிலாளர்கள் பலர் இந்த புகை காரணமாக மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு தொழிலாளி இதில் இருந்து தப்பியுள்ளார்.

தற்போது ஜாவா தீவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம். புகையுடன் சேர்ந்து பெய்யும் மழை எரிமலைக் குழம்பு ஆற்றை உருவாக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நீர்நிலைகளையும் இந்த கரும்புகை பாதித்து மாசுவை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news




இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பசிபிக் நெருப்பு வளையத்தில் மேல் உள்ள நாடு இந்தோனேசியா. பூமித் தகடுகளின் சங்கமமான இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. எப்போது இவை வெடிக்கும் என்று தெரியாது. இதன் காரணமாக கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். பலர் பலியாகியுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட இந்த செமேரு எரிமலை வெடிப்பை அடுத்து பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X