இந்தியா - ரஷ்யா நட்புறவு : பிரதமர் மோடி...பெருமிதம்

Updated : டிச 08, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (3+ 3)
Share
Advertisement
புதுடில்லி :''கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் இந்தியா - ரஷ்யா இடையேயான நட்புறவின் வேகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நம் சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான பேச்சுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல்
இந்தியா - ரஷ்யா நட்புறவு பிரதமர் மோடி பெருமிதம்!

புதுடில்லி :''கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் இந்தியா - ரஷ்யா இடையேயான நட்புறவின் வேகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நம் சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான
பேச்சுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் முறையாக இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் நிலையிலான பேச்சு டில்லியில் நேற்று நடந்தது. இதைத் தவிர ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக பல ஒப்பந்தங்களும் நேற்று கையெழுத்தாகின.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்களை புடின் தவிர்த்து வந்தார்.


சவால்கள்



கடந்த ஜூனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜெனீவாவில் சந்தித்தார். அதன்பின் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது.பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் 2019ல் பிரிக்ஸ் மாநாட்டின் போது சந்தித்து பேசினர். அதன் பின் இருவருக்கும் இடையே நடக்கும் சந்திப்பு இது.

இந்த பேச்சுக்குப் பின் பிரதமர் மோடி கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் பல சவால்களை நமக்கு தந்துள்ளது. இருப்பினும் இந்தியா - ரஷ்யா இடையேயான நட்புறவு வளர்ச்சி வேகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.கடந்த 10 ஆண்டுகளில் இந்த உலகம் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அரசியல் ரீதியில் உலக நாடுகள் இடையே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நம் இரு நாடுகளுக்கு இடையோன சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.முதல் முறையாக இரு நாடுகளின் இரு அமைச்சர்கள் இடையே பேச்சு நடந்துள்ளது; இது நம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் எதிர்காலத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


மிகச் சிறந்த நட்பு நாடு



இந்த சந்திப்பு குறித்து புடின் கூறியதாவது:காலம் பல சோதனைகளை ஏற்படுத்தியபோதும், நம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு அதையும் தாண்டி நீடித்து வருகிறது. உலகின் மிகவும் வலுவான, அதிகாரமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதைவிட எங்களின் மிகச் சிறந்த நட்பு நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதை நாங்கள் உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர்கள் கூட்டம்



இந்தியா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர்.
ரஷ்யா சார்பில் அதன் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு, வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றனர்.இதில் நம் நாட்டின் வடக்கு எல்லையில் அண்டை நாடான சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.


ஒப்பந்தங்கள் கையெழுத்து



இந்தியா - ரஷ்யா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான 20வது மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு பங்கேற்றனர். இதில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தோ - ரஷ்யா ரைபிள்ஸ் நிறுவனம் வாயிலாக உத்தர பிரதேசத்தின் அமேதியில் ஏ.கே. - 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் மூலம் நம் ராணுவத்துக்கு ஆறு லட்சம் துப்பாக்கிகள் கிடைக்க உள்ளன.அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு அளிக்கும் ஒப்பந்தம் உள்ளிட்டவையும் நேற்று கையெழுத்தாகின.

Advertisement




வாசகர் கருத்து (3+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202106:41:46 IST Report Abuse
Kasimani Baskaran அப்படியே சீனாவை சிறிது தட்டி வைக்கச்சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
07-டிச-202101:34:12 IST Report Abuse
Milirvan அட.. இப்போ இம்மு பாயி மேலும் புலம்பி கதறப்போகிறாரு.. பக்கி'களுக்கு மொளகா தடவினா வர்ற குஷியே தனி..
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
07-டிச-202100:23:45 IST Report Abuse
அன்பு அமெரிக்காவை நம்பிக்கொண்டு, ரஷியாவை கைவிடுவது, அரசனை நம்பி புருஷனை கைவிடுவது போன்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X