'சன்சத் டிவி' நிகழ்ச்சி: சசி தரூர் புறக்கணிப்பு

Updated : டிச 06, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து, -'சன்சத் டிவி'யில் நடத்தி வரும் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரசைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான சசி தரூர் அறிவித்துள்ளார்.பார்லிமென்ட் தொடர்பான நிகழ்ச்சிகள் சன்சத் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து
'சன்சத் டிவி', நிகழ்ச்சி, சசி தரூர், புறக்கணிப்பு

புதுடில்லி :எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து, -'சன்சத் டிவி'யில் நடத்தி வரும் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரசைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான சசி தரூர் அறிவித்துள்ளார்.

பார்லிமென்ட் தொடர்பான நிகழ்ச்சிகள் சன்சத் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது.


latest tamil news



கடந்த கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்ட காங்., சிவசேனா, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.,க்கள், இந்தக் கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.'சன்சத் டிவி'யில் ஒரு விவாத நிகழ்ச்சியை காங்.,கைச் சேர்ந்த சசி தரூர் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:நம் நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை மதித்து, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தேன்.

ஆனால், தற்போது பார்லிமென்டில் 12 எம்.பி.,க்கள் மீது ஜனநாயகத்தை மீறி தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதைக் கண்டித்து சன்சத் டிவி நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சிவசேனாவைச் சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்.பி.,யான பிரியங்கா சதுர்வேதி, சன்சத் டிவியில் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
07-டிச-202110:55:14 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN பார்லிமென்டின் அழகு மங்கை எம்பிக்களுடன் செல்ஃபி எடுத்து சோசியல் மீடியா டிவி ஊடகங்களுக்கு தீனி போட வேண்டி உள்ளதால் சன்சத் டிவி நிகழ்ச்சிகள் புறகணிப்பு செய்திருப்பார்.
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
07-டிச-202105:28:37 IST Report Abuse
ramani நல்ல வேளை இவர் கலந்து கொள்ள வில்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202104:21:04 IST Report Abuse
J.V. Iyer அப்பாடி மக்கள் பிழைத்தார்கள். நல்ல முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X