ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டு தண்டனை

Added : டிச 06, 2021
Share
Advertisement
பாங்காக் : மியான்மரில் ராணுவ அரசுக்கு எதிரான விமர்சனம் குறித்த குற்றச்சாட்டில் ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சிக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான மியான்மரில் 2020 நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு
ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டு தண்டனை

பாங்காக் : மியான்மரில் ராணுவ அரசுக்கு எதிரான விமர்சனம் குறித்த குற்றச்சாட்டில் ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சிக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில் 2020 நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூறி, இந்தாண்டு பிப்ரவரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

அத்துடன் ஆங் சான் சூச்சி, முன்னாள் அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஜனநாயக தேசிய லீக் கட்சி, ராணுவ அரசுக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டதாக கூறி, ஆங் சான் சூச்சி மீது சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது.

தேர்தல் பிரசாரத்தில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இவற்றில் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தது தொடர்பான வழக்கில், நேற்று ஆங் சான் சூச்சிக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மற்றொரு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் சட்டப்படி குற்ற வழக்குகளில் கைதாகி சிறை சென்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X