அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு!

Updated : டிச 07, 2021 | Added : டிச 06, 2021 | கருத்துகள் (13+ 25)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி, ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சி சட்ட விதிகளை மாற்றி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உட்கட்சி
ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்  தேர்வு!


சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி, ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், கட்சி சட்ட விதிகளை மாற்றி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


உட்கட்சி தேர்தல்



ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில், அக்கட்சிக்கு 2ம் தேதி தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையர்களாக, அமைப்பு செயலர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலர் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் உயர் பதவியான ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமியும் 4ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் ஆதரவாக, நிர்வாகிகள் பலர் மனு தாக்கல் செய்தனர். பன்னீர்செல்வம், பழனிசாமியின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்கள் இருவரும் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து பொன்னையன், ஜெயராமன் அறிவிப்பு:

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் 3, 4ம் தேதிகளில் பெறப்பட்டன. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கும் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அவர்கள் இருவரும் போட்டியிட வேண்டி, தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மனுக்களை அளித்துள்ளனர்.இந்த மனுக்கள், கட்சி விதிகளுக்கு உட்பட்டு முறையாக பரிசீலனை செய்யப்பட்டன. அவர்களுடைய மனு, கட்சி சட்ட திட்ட விதியின் படி சரியாக உள்ளதால், பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்கு ஏகமனதாக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


வாழ்த்து



ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான சான்றிதழை, பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் தேர்தல் ஆணையர்கள் வழங்கினர். இருவரும் தங்களுக்குள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்; மகளிர் அணியினர் இனிப்பு வழங்கினர்.மாநில, மாவட்ட நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் உற்சாகமாக நடனம் ஆடி, எம்.ஜி.ஆர்., பாடல்கள் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு த.மா.கா., தலைவர் வாசன், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
07-டிச-202122:16:49 IST Report Abuse
Mohan பேசும் தமிழன், பேசினால் மட்டும் போதாது படிக்கவும் தெரியணும். எனது கருத்தின் கடைசி வரியையும் படிக்கவும்.
Rate this:
Cancel
Edwin Moses - Doha,கத்தார்
07-டிச-202119:58:06 IST Report Abuse
Edwin Moses BJP ன் திருவிளையாடல் .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202109:18:01 IST Report Abuse
duruvasar பாரதி அடுத்த பாடலுக்கு அடி எடுத்துவிடுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X