ஜி.எஸ்.டி ., சரிபார்ப்பு முகாம்: ஏற்றுமதியாளர் விண்ணப்பம்

Added : டிச 06, 2021 | |
Advertisement
திருப்பூர்:மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் கோட்ட அலுவலகத்தில், ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு சரிபார்ப்பு முகாம், நேற்று முதல் துவங்கியுள்ளது.ரீபண்ட் தொகையை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள் (ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்), சரிபார்க்கவேண்டிய பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான ரீபண்ட் தொகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.சிறப்பு

திருப்பூர்:மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் கோட்ட அலுவலகத்தில், ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு சரிபார்ப்பு முகாம், நேற்று முதல் துவங்கியுள்ளது.ரீபண்ட் தொகையை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள் (ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்), சரிபார்க்கவேண்டிய பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கான ரீபண்ட் தொகைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.சிறப்பு முகாமில், 'ரிஸ்கி' பட்டியலில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. தகுதியுள்ளோருக்கு நிறுத்திவைக்கப்பட்ட ரீபண்ட் தொகை விடுவிக்கப்பட உள்ளது.திருப்பூரில், குமார்நகரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் அலுவலகத்தில் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. முதல்நாளிலேயே, பின்னலாடை ஏற்றுமதியாளர் பத்து பேர் விண்ணப்பித்தனர்.ஜி.எஸ்.டி., திருப்பூர் துணை கமிஷனர் சித்தார்த் கூறியதாவது: பெரும்பாலானோர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரீபண்ட் பெறவில்லை. உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, பரிசீலித்துவருகிறோம். ரிஸ்கி பட்டியலில் இடம்பெற்று, ரீபண்ட் தொகை பெறமுடியாத நிலையில் உள்ள ஏற்றுமதியாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.வரும் 8ம் தேதி (நாளை), கோவை மத்திய கலால் மற்றும் சரக்கு, சேவை வரித்துறை முதன்மை கமிஷனர், திருப்பூர் வருகிறார். அன்று காலை, 11:00 மணிக்கு, ஏற்றுமதியாளர் சங்க அரங்கில், பின்னலாடை துறையினரின் பிரச்னைகளை கேட்டறிகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X