திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் விண்ணப்பங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதற்கான படிவங்கள் பெறப்பட்டு ஊழியர்கள் அவற்றை சரி பார்த்து ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட 4 வது மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் விண்ணப்பதாரர்களை, தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் மற்றும் தேர்தல் பிரிவினர் உடனிருந்தனர்.கட்டட பணி ஆய்வுஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சிமென்ட் ஷீட் கூரை, கான்கிரீட் கூரையாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE