இந்தியா

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் ராணுவ வீரர்கள் மீது எப்.ஐ.ஆர்.,

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கொஹிமா :நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பிரிவினர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதல்வர் நெய்ப்பு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
 நாகாலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம்  ராணுவ வீரர்கள் மீது எப்.ஐ.ஆர்.,

கொஹிமா :நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடன் அப்பிரிவினர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் முதல்வர் நெய்ப்பு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து உள்ளது.
இங்குள்ள மான் மாவட்டம் ஒடிங்க் கிராமம் வழியாக பயங்கரவாதிகள் வருவதாக கிடைத்த தகவலின்படி, ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவினர் அங்கு சென்றனர். அந்த வழியாக வந்த வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். அந்த வாகனத்தில் இருந்த சுரங்கத் தொழிலாளர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.


latest tamil news
இதையடுத்து அந்தப் பகுதியில் குவிந்த கிராம மக்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. தற்காப்புக்காக வீரர்கள் சுட்டதில் கிராம மக்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் ராணுவ வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசும், ராணுவமும் உத்தரவிட்டுள்ளன.

இது தொடர்பாக ராணுவத்தின் 21வது துணை சிறப்பு பிரிவினர் மீது நாகாலாந்து போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து உள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சென்றதாக ராணுவ பிரிவு சார்பில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்காமல், ராணுவத்தின் சிறப்பு படை சென்றுள்ளது. இதில் இருந்தே கொலை செய்ய வேண்டும், காயமேற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளது உறுதியாகிறது. எதிர்தரப்புக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டுக்
கொன்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முழு அடைப்புஇதற்கிடையே கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு நேற்று காலை முதல் மாலை வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதே நேரத்தில் நாகா மக்கள் சங்கமும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.இதற்கிடையே ஒடிங்க் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு எதிர்ப்பு

வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ராணுவ படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்காக ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த அதிகாரத்தை ரத்து செய்யும்படி மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மக்கள் கட்சித் தலைவரான மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த சட்டத்தை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-202108:00:27 IST Report Abuse
அப்புசாமி Please don't repeat the same comments
Rate this:
Cancel
07-டிச-202108:00:07 IST Report Abuse
அப்புசாமி இங்கே தமிழகத்தில் ஒரு விமானப் படை அதிகாரியை நாங்களே விசாரிக்கிறோம்னு விமானப்படை தூக்கிட்டு போச்சே, என்ன விசாரணை நடந்தது? அதே மாதிரிதான். மக்கள் காதில் பூ சுத்த எப்.ஐ.ஆர் எல்லாம் போடுவார்கள். அப்புறம் அவிங்களுக்கே பத்ம, வீர் சக்ரா விருது, கெவுனர் பதவின்னு அவிங்க அதிருஷ்டத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202106:36:11 IST Report Abuse
Kasimani Baskaran இராணுவத்தின் மீது சாதா போலீஸ் கை வைக்கவே முடியாது. அதுவும் தீவிரவாதிகளை வேட்டையாடக் காத்திருக்கும் பொழுது உத்தரவுகளை மதிக்காமல் தப்ப முயன்ற வாகனத்திலிருந்தோரை சுட்டிருக்கிறார்கள். இராணுவ விசாரணை தான் உண்மையை கண்டுபிடிக்க உதவும். நாட்டுக்காக ஆயுதமேந்தி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்வோரை பாராட்டவில்லை என்றாலும் குறைந்தபட்சம் தூற்றாமலாவது இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X