மதுரை : மதுரையில் முன்னாள் சட்ட அமைச்சர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவுட்போஸ்ட்டில் உள்ள சிலைக்கு மாலையணிவித்தனர்.அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ., வெங்கடேசன்,முன்னாள் கவுன்சிலர் சசிக்குமார் உள்ளிட்டோர் மாலையணிவித்தனர்
.பா.ஜ., நகர் தலைவர் சரவணன் தலைமையில் புறநகர் தலைவர் சுசீந்திரன், முன்னாள் தலைவர்கள் சசிராமன், ராஜரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் கல்வாரி தியாகராஜன், நிர்வாகிகள் மீனாம்பிகை, ராஜா, ஜெயசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள்கட்சி மாநில துணை செயலாளர் அய்யங்காளை தலைமையில் துணை பொது செயலாளர் வில்லவன் கோதை, நிர்வாகிகள் அன்பழகன், திருக்குமரன், வீரக்குமார், செல்வஅரசு உள்ளிட்டோர் மாலையணிவித்தனர்.உசிலம்பட்டி: பா.பி., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் தலைமையில் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் படத்திற்கு மாலையணிவித்தனர்.தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பில் நிர்வாகிகள் தெய்வம்மாள், பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை, விவசாயிகள் விடுதலை முன்னணியினர் படத்திற்கு மாலையணிவித்தனர்.
அலங்காநல்லுார்: பெரிய ஊர்சேரியில் சிலைக்கு எம்.எல்.ஏ., வெங்கடேசன்மாலையணிவித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வி.சி.க., சார்பில் தொகுதி செயலாளர் சிந்தனைவளவன் தலைமையில் ஊர்வலம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE