தமிழ்நாடு

'கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு'

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :''உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சிகிச்சைக்கு, சித்த மருத்துவம் உறுதுணையாக இருந்து வருகிறது,'' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், சித்த மருத்துவ துறை சார்பில், 'சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு முறைகள்' தொடர்பான மருத்துவ தொடர்
'கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு'


சென்னை :''உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சிகிச்சைக்கு, சித்த மருத்துவம் உறுதுணையாக இருந்து வருகிறது,'' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், சித்த மருத்துவ துறை சார்பில், 'சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு முறைகள்' தொடர்பான மருத்துவ தொடர் கல்வி கலந்தாய்வு கூட்டம் நேற்று துவங்கியது.




ஆறு நாட்கள்



மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் வரும், 11ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தலைப்புகள், ஆராய்ச்சி செய்யும் முறைகள் குறித்து, 12 நிபுணர்கள் தங்களின்
அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:தமிழகத்தில் தான் அதிகளவில் சித்தர்களின் கண்டுபிடிப்புகளால், சித்த மருத்துவம் வளர்ந்து வருகிறது. இருப்பினும், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் போற்றிய சித்த மருத்துவத்தை கையாள்வதில், சற்று தடை இருப்பதாக தான் தோன்றுகிறது.

சித்தர்களின் மருத்துவம், விஞ்ஞான வழியாக வருவதற்கு முன் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், சித்த மருத்துவத்தை அணுகும் முறை மக்களிடையே குறைவாகவே உள்ளது. அகத்தியர், திருமூலர், தேரையார் போன்ற சித்தர்கள், மருத்துவம் குறித்து வழிமுறைகளை அரிய கேள்விகள் கேட்டு, விஞ்ஞானத்திற்கு முன்பாகவே தங்களது அறிவின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.


வரவேற்பு



latest tamil news




மனிதனின் நோய்களை கண்டுபிடிப்பதற்கான எல்லா மருத்துவத்தின் அணுகுமுறையும் ஒன்றாகவே உள்ளது. பொதுவாக மருத்துவத்தில் நாம் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நாக்கு, மொழி, நிறம், விழி, ஸ்பரிசம், நீர், நாடி, மலம் போன்றவற்றை கேட்டறிந்து, அதற்கான சிகிச்சையை டாக்டர்கள் அளிக்கின்றனர்.

கிராமங்களில் சித்த வைத்தியர்கள், சிறப்பான அணுகுமுறையில் நோய்களை குணப்படுத்துகின்றனர். தற்போது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய்க்கு, சித்த மருத்துவத்தின் வாயிலாக, பெரிய தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே, உலகெங்கும் புகழ் பெற்று வரும் சித்த மருத்துவத்தை அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

தற்போது, மலேஷியா போன்ற நாடுகளில், சித்த மருத்துவத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் கணேஷ், பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புஷ்கலா, சித்த மருத்துவ துறை தலைவர் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202110:21:56 IST Report Abuse
duruvasar மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் பயிற்சியை செய்தாலே மூக்கிலும் தொண்டையிலிருக்கும் கொராணா கிருமிகள் வயிற்று வழியாக சென்று பெருங்குடல் வழியாக வெளியே போய்விடும் என்ற கண்டுபிடிப்பை நேற்று நமது நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசு அய்யா பேசியதை காணொளி நிகழ்சியில் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன் உலகநாடுகள் இதை காப்பியடிக்குமுன் தமிழக அரசு இதற்கான காப்புரிமை பெறவேண்டும். சித்தமாவது, பித்தமாவது தேவையே இல்லை. மொத்தமாக ஒழிக்க விடியலை தந்த மாசு அய்யாவுக்கு நன்றி.
Rate this:
Cancel
k.parthiban - coimbatore,இந்தியா
07-டிச-202109:58:33 IST Report Abuse
k.parthiban "" ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதரிடமே சிகிச்சை வழி நிரூபணம் ஆகியுள்ளதை "" மறுக்கிறார்கள்
Rate this:
Cancel
rc - Chennai,இந்தியா
07-டிச-202108:24:25 IST Report Abuse
rc பாரம்பரிய மருந்துகளின் அறிவியல் தன்மை பற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுப்பப் படுகின்றன. அலோபதியில் எலி அல்லது குரங்குகளினிடம் ஐந்து அல்லது பத்தாண்டுகளில் சோதனை செய்து முடிவெடுக்கிறார்கள். சித்த, ஆயுர்வேத முறைகளிலோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதரிடமே சிகிச்சை வழி நிரூபணம் ஆகியுள்ளதை கவனிக்கத் தவறுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X