பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : தண்டனை கிடைப்பதில் தாமதம்!

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தை பொறுத்தவரையில் லஞ்சம் பெற்று கையும், களவுமாக சிக்கி கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. லஞ்சம் பெறுவதில் பேதம் இல்லை என்றாலும், பெண் அதிகாரிகள் சிக்கும்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:latest tamil news


தமிழகத்தை பொறுத்தவரையில் லஞ்சம் பெற்று கையும், களவுமாக சிக்கி கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. லஞ்சம் பெறுவதில் பேதம் இல்லை என்றாலும், பெண் அதிகாரிகள் சிக்கும் போது, இந்நாட்டின் நிலை மிகவும் கவலை கொள்ள செய்கிறது.


latest tamil newsலஞ்ச அதிகாரிகளின் பெயர், படங்கள் வெளியாகி, அவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்துவது எல்லாம், பிறருக்கு எச்சரிக்கை மற்றும் திருத்துவதற்கான முயற்சி என நினைக்கலாம்.ஆனால், லஞ்சப் பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்வது தான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.


latest tamil news


கசாப்புக் கடையில் ஆட்டை வெட்டும் போது, அருகில் கட்டப்பட்டுள்ள ஆடு, தனக்கும் அந்த நிலை தான் என்பதை உணராமல் உணவு உண்பதை போல, இன்றைக்கு லஞ்சம் பெறும் அதிகாரிகள் உள்ளனர்.சாதாரண ஜாதி சான்றிதழ் முதல் பத்திரப் பதிவு வரை, அரசு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

தினமும், 'கல்லா' கட்ட வேண்டும் என கங்கணம் கட்டியபடியே, அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகின்றனர்.பொதுமக்களிடம், 'லஞ்சம் கொடுக்காதீர்' என விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் லஞ்சம் கொடுக்காதவரின் கோப்பு, அரசு அலுவலகத்தில் நகர்வதே இல்லையே... பின் மக்கள் என்ன தான் செய்வர்?

அரசு துறைகள், 'டிஜிட்டல்'மயம் ஆனாலும், ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்து லஞ்சம் வாங்கி விடுகின்றனர்.என்ன செய்தாலும், அதிகாரிகள் திருந்துவதாக இல்லை.

தமிழகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள், முன்பை விட தீவிரம் அடைந்துள்ளன. ஆனால், லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு தண்டனை தான் விரைவில் கிடைப்பதில்லை.இந்த குறையை சரி செய்தால், லஞ்சத்தை பெருமளவு குறைக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-டிச-202122:01:33 IST Report Abuse
Anantharaman Srinivasan Post office தவிர மற்ற எல்லா இடங்களிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது.. Modi நல்லவராய் இருக்கலாம். ஆனால் மத்தியரசு துறைகள் ??
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-டிச-202118:29:32 IST Report Abuse
vbs manian நிர்வாகம் சீராக இயங்க லஞ்சம் என்ற கிரீஸ் தேவைப்படுகிறதே. இது இல்லாவிட்டால் முடங்கிவிடும்.
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-202116:29:13 IST Report Abuse
Ganesh எல்லாம் டாக்டர் அவர்கள் இயற்றிய சட்டம் தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X