அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமாவளவனுக்கு அம்பேத்கர் வியாபார பொருள்: அண்ணாமலை

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை : ''திருமாவளவன் பாலகிருஷ்ணனை போல அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சி பா.ஜ. அல்ல. அவர்களுக்கு அம்பேத்கர் வியாபார பொருள்'' என்று தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் முதல் துறைமுகம் வரை நேற்று நடைபயணமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை



சென்னை : ''திருமாவளவன் பாலகிருஷ்ணனை போல அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சி பா.ஜ. அல்ல. அவர்களுக்கு அம்பேத்கர் வியாபார பொருள்'' என்று தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news



டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் முதல் துறைமுகம் வரை நேற்று நடைபயணமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின் அண்ணாமலை அளித்த பேட்டி: தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகின்றன. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் பிரிவினைவாதம் கஞ்சா விற்பனை சுரண்டல் லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்கள் தலைதுாக்கியுள்ளன; அவற்றை தடுக்க வேண்டும்.


latest tamil news



மக்களின் கோபத்திற்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.மத்திய அரசின் திட்டங்களில் தமிழக அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி தன் திட்டங்களை போல வழங்குகிறது.

தமிழகத்திலும் அரசின் திட்டங்களில் ஜனநாயக முறைப்படி முதல்வர் படத்துடன் பிரதமர் படமும் இடம் பெற வேண்டும்.தமிழக அரசு நிறுவனமான 'எல்காட்' மின்னணு பொருட்களை உற்பத்தி செய்து அரசுக்கு தரமாக வழங்க வேண்டும். ஆனால் அரசு அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு பொருள் கூட வாங்காமல் கமிஷன் கிடைப்பதால் தனியாரிடம் வாங்குகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலர் பாலகிருஷ்ணன் போல அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சி பா.ஜ. அல்ல.அவர்களுக்கு அம்பேத்கர் வியாபார பொருள். ஆனால் பா.ஜ.வுக்குஅப்படி இல்லை.

அம்பேத்கர் பிறந்த படித்த வாழ்ந்த இடங்களான ம.பி. லண்டன் டில்லி உள்ளிட்ட பஞ்சதீர்த்தம் எனப்படும் ஐந்து இடங்களில் அவருக்கு நினைவிடம் கட்டிய பெருமை பா.ஜ.வையே சாரும். அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்ய கூடியது திருமாவளவன் கட்சி.

பா.ஜ. அனைவருக்குமான கட்சி. எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரான கட்சி அல்ல. ஒரு பக்கம் ராமர் கோவிலும் இருக்க வேண்டும். மற்றொரு பக்கம் இஸ்லாமிய மக்களுக்கு மசூதி இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
07-டிச-202116:29:22 IST Report Abuse
INDIAN Kumar ஜாதிக்கும் மதத்துக்கும் தான் கட்சி இருக்கிறது மனிதர்களுக்கு தேடி பிடிக்க வேண்டி இருக்கிறது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202111:09:44 IST Report Abuse
duruvasar குருமாவுக்கு ஒரே கொள்கைதான். அம்பேத்கார் போட்டாவை வைத்துகோண்டு ஃபிலிம் காட்டி ஒருசில ஆயிரம் கோடிகளை யாவது கல்லா கட்டவேண்டும் என்பது மட்டும்தான்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-202111:01:22 IST Report Abuse
ஜெயந்தன் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஓரிரு வியாபார பொருள் இருக்கும். பிஜேபிக்கு இந்து மதமும் ராமரும் இருப்பது போல. அரசியலே வியாபாரம் தான். அதிலும் பிஜேபி கடைத்தெடுத்த வியாபாரி
Rate this:
raja - Cotonou,பெனின்
07-டிச-202113:52:38 IST Report Abuse
rajaஉங்களுக்கு மதத்தை வச்சி வியாபாரம் பண்றவனுவோ யாருன்னு தெரியலை நம்ம, ராவுளு பிரியங்கா கணியக்கா சோடலின் ... அதுலயும் கிருத்தவனுவோ முஸ்லிமுக்காக மட்டுமே பாடுபடுவானுவோ அதுலேயும் தாழ்த்தப்பட்டவங்க என்றால் விளக்கு புடிச்சி போராடுவானுவோ..... ஏன்னா அவனுவோ போட்ட பிச்சை யாலதானே வி டி யா மூஞ்சி வந்து இருக்கான்..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X