கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டி.சி., குறித்த அரசாணையை எதிர்த்து மனு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு: இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள்

சென்னை : மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு: இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கான கல்வித் தொகையை அரசு வழங்குகிறது.

கடந்த 2010 ஜூலையில் அரசு தரப்பில் பொதுவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசாணை அது. அந்த அரசாணையை தொடர்ந்து கல்வி கட்டணம் பாக்கி வைத்திருந்த பெற்றோரும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும்படி பள்ளி நிர்வாகத்தை அணுகினர்.


latest tamil news



அரசிடம் இருந்து எந்த மானியமும் பெறாத தனியார் பள்ளிகளுக்கு இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தில் பாதுகாப்பு உள்ளது. எனவே மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது.

மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண பாக்கி குறித்து தெளிவான விளக்கம் தராமல் பொத்தாம் பொதுவான உத்தரவை பிறப்பித்ததால் கட்டணப் பாக்கி வைத்திருந்த பெற்றோரும் மாற்றுச் சான்றிதழ் கேட்டனர்.

எனவே அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடும் விதமாக பிறப்பித்த அரசாணை இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்துக்கு எதிரானது. இந்த அரசாணையின் குறிப்பிட்ட பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
07-டிச-202111:33:11 IST Report Abuse
raja மூளை அபாரமா இருக்குறவனுவோ? தான் இப்போ பள்ளி கல்வி துறை அமைச்சரா இருக்கானுவோ... வெக்கம் கெட்டவனுவோ... துக்ளக் ஆட்சி நடத்துறானுவோ.....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
07-டிச-202107:26:10 IST Report Abuse
 N.Purushothaman கட்டண பாக்கி வைத்திருக்கும் பெற்றோர்களும் மாற்று சான்றிதழ் கேட்கின்றனர் ....////திருட்டு திராவிட ஆட்சியில் அதிகாரிகளுக்கு கூட மூளை வேலை செய்யல போல ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X