பொது செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்; நாளை முதல் 2 நாளைக்கு மழை

Added : டிச 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையை ஒட்டி, வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். மற்ற
TN rain, weather report, weather,தென் மாவட்டங்கள், மிதமான மழை, நாளை கனமழை, வானிலை மையம், இயக்குநர் புவியரசன், கடலூர், ராமநாதபுரம் மழை

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் இலங்கையை ஒட்டி, வளிமண்டலமேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வரும் 9ம் தேதி அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.


latest tamil news



சென்னையில் இன்று சில இடங்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலையில் பனி மூட்டம் நிலவும். அதிகபட்சம் 31; குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வேப்பூர், கடலுார், போடிநாயக்கனுாரில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. உத்தமபாளையம், திருப்பூர், 9; பெருஞ்சாணி, ஸ்ரீவில்லிபுத்துார், 7; லெப்பைக்குடிகாடு, ஆண்டிப்பட்டி, கூடலுார், 6 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
07-டிச-202109:31:44 IST Report Abuse
Nagercoil Suresh மேலிருக்கும் இந்த வீடு பல ஆண்டுகளாக வலம் வருகிறது ஒரு வேளை அங்கு பணி செய்பவர்கள் வீடாக இருக்குமோ என்னமோ எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டு மழை அதிகம் தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X