கலெக்டர் அலுவலகம் முன் மாணவர்கள் முற்றுகை

Added : டிச 07, 2021 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.விழுப்புரம், சாலாமேடு பகுதியில் அண்ணாமலை பல்கலையோடு இணைக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலை முதுகலை விரிவாக்க மையமான உறுப்புக் கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்

விழுப்புரம்-விழுப்புரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.விழுப்புரம், சாலாமேடு பகுதியில் அண்ணாமலை பல்கலையோடு இணைக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலை முதுகலை விரிவாக்க மையமான உறுப்புக் கல்லுாரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.கல்லுாரியில், நுாலகம், கணினி, ஆய்வகம், குடிநீர் வசதி ஏதுமில்லை என தெரிவித்தும், அடிப்படை வசதிகளைக் கேட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X