அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமீறல்: கமலுக்கு 'நோட்டீஸ்?'

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்றுக்கு பின், தனிமைப்படுத்தி கொள்ளாமல், தனியார் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பங்கேற்றதாக சர்ச்சை எழுந்ததால், அவரிடம் விளக்கம் கேட்க தேவையில்லை என, அரசு தெரிவித்துள்ளது.சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம், கமல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதாகிருஷ்ணன்,
Kamal, Kamal Haasan, Corona

சென்னை : கொரோனா தொற்றுக்கு பின், தனிமைப்படுத்தி கொள்ளாமல், தனியார் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பங்கேற்றதாக சர்ச்சை எழுந்ததால், அவரிடம் விளக்கம் கேட்க தேவையில்லை என, அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம், கமல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதாகிருஷ்ணன், ''கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல், பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும்,'' என்றார்.

இதைத்தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்:'நடிகர் கமல், இரண்டு தடுப்பூசி போட்டு கொண்டதால் தான், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிக குறைந்த அளவில் இருந்தது. 'அதனாலேயே அவர் விரைவில் குணமடைந்தார். கமலின் உடல்நிலை குறித்து, முதல்வர் உட்பட பலரும் கேட்டறிந்தனர்' என, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தேன்.

அதை தவறாக புரிந்து கொண்டு, 'கமலிடம் விளக்கம் கேட்கப்படும்' என்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததும், 14 நாட்கள் தனிமைக்கு பின், டாக்டரின் ஆலோசனை படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், இதுதொடர்பாக நடிகர் கமலிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:மருத்துவமனையில் இருந்தபோதே கமல் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். மருத்துவ அறிக்கையிலும், டிச., 4க்கு பின், அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. டாக்டர்களிடம் அனுமதி பெற்றே, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றார். இந்த விவகாரத்தில், கொரோனா மருத்துவ விதிகளை அவர் மீறவில்லை.

தனக்கு தொற்று வந்தபோதும், 'நோய் தொற்று விலகவில்லை' என எச்சரித்தார். மேலும், தடுப்பூசி மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், 'இரண்டு தடுப்பூசி போட்டு கொண்டதால் தான், மீண்டு வந்து உள்ளேன்' என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
07-டிச-202114:34:27 IST Report Abuse
raja கமலிடம் விளக்கம் கேட்டு இருந்தால்... தடுப்பூசியை போடாமல்...விடியலை கொக்கி, ஒற்றனைவோம் வா...உங்கள் தொகுதியில் சோடலின்.. என்று மாபெரும் மாநாடு நடத்தி கொரானா பரவியதற்கு விடியலுக்கு விளக்கம் தரவேண்டி வந்திருக்கும் ... தப்பித்து விட்டானுவோ ...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202111:01:56 IST Report Abuse
duruvasar அப்பப்ப 'கெட்டப்ப' மாத்தறுதான் இந்த நடிகரின் ரகசியம். அதனால் உட்ருங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-டிச-202110:59:45 IST Report Abuse
duruvasar அப்பப்ப 'கெட்டப்ப' மாத்தறுதான் இந்த நடிகரின் ரகசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X