காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை| Dinamalar

'காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை'

Added : டிச 07, 2021 | |
ஹாசன்-''ம.ஜ.த., குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:காலை பொழுது விடிந்தால், ம.ஜ.த.,வை குடும்ப அரசியல் கட்சி என விமர்சித்தனர். காங்கிரசில் குடும்ப அரசியல் இல்லையா? பா.ஜ.,வில் இல்லையா.

ஹாசன்-''ம.ஜ.த., குடும்ப அரசியல் செய்வதாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.ஹாசனில் அவர் நேற்று கூறியதாவது:காலை பொழுது விடிந்தால், ம.ஜ.த.,வை குடும்ப அரசியல் கட்சி என விமர்சித்தனர். காங்கிரசில் குடும்ப அரசியல் இல்லையா? பா.ஜ.,வில் இல்லையா. ஒரே வீட்டில் உள்ளவர்கள், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,யாக இல்லையா?எங்களுடையது குடும்ப அரசியல் கட்சி என கூற, பா.ஜ., மற்றும் காங்கிரசாருக்கு அருகதை இல்லை.குடும்ப அரசியல் இருக்கக் கூடாது என்றால், சட்டம் கொண்டு வரட்டும். மாநில கட்சியை ஒழிக்க முயற்சித்ததால், காங்கிரசுக்கு இந்த கதி வந்துள்ளது. பா.ஜ., ஒரு கொள்ளையரின் கட்சியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X