3 நிமிடத்தில் 900 பேர் 'டிஸ்மிஸ்' : சர்ச்சையில் இந்திய தொழிலதிபர்

Updated : டிச 07, 2021 | Added : டிச 07, 2021 | கருத்துகள் (24)
Advertisement
நியூயார்க்: இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் 3 நிமிடங்களில் 900 பேரை பணி நீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் 'பெட்டர் டாட் காம்' என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை கூட்டாக துவக்கினார். இந்த வலைதளத்தில் தரகு கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம். ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும்
CEO, Fires, 900 Employees, Zoom Call, Employment, Terminated, Effective Immediately, சிஇஓ, டிஸ்மிஸ்,

நியூயார்க்: இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் 3 நிமிடங்களில் 900 பேரை பணி நீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் 'பெட்டர் டாட் காம்' என்ற வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை கூட்டாக துவக்கினார். இந்த வலைதளத்தில் தரகு கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம். ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பிரிவிலும் வெளிப்படைத் தன்மை இருந்ததால் அந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் விஷால் கார்க் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 3 நிமிடங்களில் ஊழியர்கள், 900 பேரை திடீரென வேலை நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளார்.


latest tamil news


மொத்த ஊழியர்களில் 9 சதவீதம் பேர் வேலையிழப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு வேலையில் மந்தம், செயல்பாடுகளில் திறமையின்மை, உற்பத்தி திறன் குறைவு ஆகிய காரணங்களை விஷால் கார்க் கூறியுள்ளார். பணி நீக்கம் செய்தோரில் 250 பேர், 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து 8 மணி நேர ஊதியத்தை பெறுவதாக விஷால் கார்க் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அந்த நிறுவனம் மட்டுமின்றி பணிகளை வழங்கும் வாடிக்கை நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் விஷால் 900 ஊழியர்களை நீக்கியது அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இவர் ஏற்கனவே வேலையை விரைவாகச் செய்யும்படி ஊழியர்களை கடுமையாக திட்டி சர்ச்சையில் சிக்கியவர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-டிச-202121:57:21 IST Report Abuse
DARMHAR விநாச காலே விபரீத புத்தி
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
09-டிச-202112:03:10 IST Report Abuse
vasan இந்த நிறுவனம் வளர்ச்சி அடையும்போது இவர்கள் திறமை இல்லாதவர்களாக இருந்தார்களா? அப்போது அது எப்படி சாத்தியம்.......இவனின் பேராசை தான் காரணம் இது வெளி நாடு முதலாளி இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
07-டிச-202115:42:57 IST Report Abuse
pattikkaattaan வேலை செய்யாதவர்களை எந்த முதலாளி வேலையில் வைத்திருப்பார் ?... நம்ம ஊரூ அரசாங்க வேலையா லஞ்சம் வாங்க மட்டும் வேலை செய்வதற்கு ?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X